கமலை தொடர்ந்து கோஸ்ட்டாக மாறிய நாகார்ஜுனா.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகப் போகுதாம்!

ஹைதராபாத்: டோலிவுட்டின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி உள்ள கோஸ்ட் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி - ராம்சரண் நடித்து வருவதை போலவே, நாகார்ஜுனாவும் - நாக சைதன்யாவும் முன்னணி நடிகர்களாக இன்னமும் மாஸ் காட்டி வருகின்றனர்.

விக்ரம் படத்தில் கோஸ்ட்டாக கமல் நடித்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜுனாவின் படத்திற்கும் கோஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோஸ்ட் கமல்

கோஸ்ட் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கோஸ்ட்டாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான அந்த படம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. விக்ரம் படத்தை மீண்டும் ஓடிடியில் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கமலை போலவே கோஸ்ட் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனாவும் நடித்துள்ளார்.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

கருட வேகா எனும் அதிரடி ஆக்‌ஷன் படத்தை இயக்கிய இயக்குநர் பிரவீன் சத்தரு இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக போவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. கில்லிங் மெஷின் என நாகார்ஜுனா கையில் கத்தியுடன் இருக்கும் வெறித்தனமான போஸ்டரும் வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. வரும் ஜூலை 9ம் தேதி கோஸ்ட் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

காஜல் அகர்வால் ஹீரோயின்

காஜல் அகர்வால் ஹீரோயின்

திருமணத்துக்கு பிறகு காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா படம் சொதப்பிய நிலையில், கோஸ்ட் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். காஜல் அகர்வால் மட்டுமின்றி சோனல் சவுகானும் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் ஆரம்பிக்கப் போகும் அந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பாரா? அல்லது அவருக்கு பதில் த்ரிஷா நடிக்கப் போகிறாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

வரவேற்பு இல்லை

வரவேற்பு இல்லை

இந்த ஆண்டு இறுதியில் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நாகார்ஜுனாவின் கோஸ்ட் திரைப்படம் திடீரென ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆக காரணம் என்ன என்று விசாரித்தால், அந்தளவுக்கு படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இல்லாதது காரணம் என்கின்றனர். மேலும், எந்த ஓடிடியில் வெளியாக போகிறது என்கிற அறிவிப்பையும் படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட் என்பதால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தான் இந்த படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தெலுங்கு படங்களை வாங்கி வெளியிட்டு வரும் நிலையில், ஆஹா ஓடிடியில் வெளியாகவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

பிரம்மாஸ்திரா

பிரம்மாஸ்திரா

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகார்ஜுனா. மகன் நாக சைதன்யா அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள நிலையில், நாகார்ஜுனாவும் ஷாருக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தில் இடம்பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X