நானியின் "ஷியாம் சிங்கா ராய்" ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : நடிகர் நானியின் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்".
Recommended Video
தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக உள்ள சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்
தேவதாசி வாழ்க்கை முறையை பற்றிய முன்ஜென்ம கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் இப்பொழுது இதன் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

"ஷியாம் சிங்கா ராய்"
தெலுங்கு சினிமாவின் நேச்சுரல் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நானியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது . அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான நான் ஈ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற சூழலில் இங்கும் இவர் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார் . எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்" . நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கி இருந்தார்.

பூர்வ ஜென்மத்தை அடிப்படையாக
மிடில் கிளாஸ் அப்பாயி படத்திற்கு பிறகு நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி இந்த படத்தில் நடித்துள்ளார். தேவதாசி வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் நிகழ்காலம் மற்றும் பூர்வ ஜென்மத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்து உள்ளார். மேலும் தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக உள்ள கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் இந்த இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நிஹாரிகா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

நானி இரட்டை வேடத்தில்
பெரும் எதிர்பார்ப்புக்கு பின் இந்த படம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும் வெளியான "ஷியாம் சிங்கா ராய்" தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது. நானி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். குறிப்பாக ப்ளாஷ் பேக்கில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்திருப்பார். இதில் சாய்பல்லவி ப்ளாஷ்பேக்கில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பி இருப்பார்.

ஓடிடியில் ரிலீஸ்
இவ்வாறு முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை தாண்டி "ஷியாம் சிங்கா ராய்" திரையரங்குகளில் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி ஜனவரி 21-ஆம் தேதி "ஷியாம் சிங்கா ராய்" நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











