Surya Saturday OTT:'சூர்யா'ஸ் சாட்டர்டே' தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடீங்களா? ஓடிடியில் பாருங்க!
சென்னை: இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், நானி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்பில் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் சூர்யா'ஸ் சாட்டர்டே. படம் வெளியான முதல் நாளிலேயே படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்ததால், படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நானி, எஸ் ஜே சூர்யா, பிரியாங்கா மோகன், அதிதி பாலன், அபிராமி, அஜய் கோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏதாவது பிரச்சனை என்றால்,அந்த இடத்தில் முதல் ஆளாக நின்றுஅடிதடி, சண்டை, வெட்டு குத்து என்றும் இருக்கும் நானி(சூர்யா)வை நினைத்து அவனது பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். இப்படி கோவப்பட்டால் இவன் வாழ்க்கை என்னவாகும் என வருத்தப்படும் நானியின் அம்மா, வாரத்தில் ஒருநாள் மட்டும் கோபத்தை வெளிப்படுத்தும் படி, நானியிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார். அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நானி,வாரம் முழுக்க என்ன பிரச்சனை வந்தாலும், அதை குறித்துவைத்துக்கொண்டு சனிக்கிழமை நாளில் மட்டும் அடக்கிவைத்த மொத்த கோவத்தையும் வெளிப்படுத்துகிறார்.

படத்தின் கதை: இந்த நேரத்தில் தான், சோகுல பாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா. தனது தனிப்பட்ட கோபத்தை அப்பகுதி மக்கள் மீது காட்டி அவர்களை ஆட்டிப்படைத்து வருகிறார். இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் பிரியங்கா மோகன் மூலமாக இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் நானி, தனது கோபத்தை வெளிப்படுத்தி சோகுல பாலம் மக்களை எப்படி காப்பாற்றினார் என்பது தான் சூர்யா'ஸ் சாட்டர்டே படத்தின் கதை. இந்த படத்தில் நானியின் நடிப்பை விட எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நானி, நான் நடித்த படத்தில் என்னை விட எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருந்தது என்று மனம் திறந்து பாராட்டினார்.
ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில், சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 29ந் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 26-ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படத்தை பார்க்கலாம் என அறிவித்துள்ளனர். தியேட்டரில் இப்படத்தை தவறவிட்டவர்கள் ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











