Aattam movie: தேசிய விருது பெற்ற ஆட்டம் படம்.. ஓடிடி ரிலீஸ் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

சென்னை: மலையாளத்தில் வினய் கோட்டை உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி ரிலீசான படம் ஆட்டம். திரில்லர் படமாக வெளியாகி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக அமைந்திருந்தது இந்தப் படம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஆட்டம் படத்திற்கு சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆட்டம் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆனந்த் ஏகார்ஷி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாதவர்களும் பார்க்கும் வகையில் அடுத்ததாக படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த படத்தை ஓடிடியில் தேடிப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Aattam movie national award winning movie OTT

ஆட்டம் படம்: மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி ரிலீசான படம் ஆட்டம். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வெற்றியை குவித்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ள 70வது தேசிய விருதுகளில் ஆட்டம் படம் 3 விருதுகளை தட்டித் தூக்கியுள்ளது. சிறந்த மலையாள படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டிங் என 3 தேசிய விருதுகள் ஆட்டம் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில், படம் தற்போது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓடிடியில் ஆட்டம் படம்: ஆட்டம் படத்தில் வினய் போர்ட், கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்திருந்தது. பார்வையாளர்களை மட்டுமில்லாமல் விமர்சகர்களையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாதவர்களும் பார்க்கும் வகையில் அடுத்ததாக ஓடிடியில் படம் ரிலீசாகியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆட்டம் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் ஏகர்ஷி இயக்கத்தில் ஆட்டம் படம் உருவாகியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடல்: மேலும் கன்னடம், பெங்காலி, டட்ச், பிரெஞ்ச், இத்தாலி உள்ளிட்ட மொழிகளிலும் சப் டைட்டில்களுடன் ஆட்டம் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளான ஆட்டம் படம் கண்டிப்பாக ஓடிடியிலும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்தப் படம் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, கிராண்ட் ஜூரி விருதையும் பெற்றது. கடந்த ஆண்டில் இதுபோன்ற அதிகமான சர்வதேச திரைப்பட விழாக்களில் ஆட்டம் படம் திரையிடப்பட்டது.

ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து: 13 நபர்களை கொண்ட நாடகக்குழு. இந்தக்குழுவில் அஞ்சலியை தவிர்த்து மற்றவர்கள் ஆண்கள். பார்ட்டி ஒன்றில் இவர்கள் கலந்துக் கொள்ள, தன்னை தகாத முறையில் யாரோ தொட்டதாக அஞ்சலி, வினய்யிடம் கூறுகிறார். அந்த நபரின் முகத்தை அஞ்சலி பார்க்காத நிலையில், அவரை கண்டுபிடிக்கும்வகையில் அடுத்தடுத்த கதைக்களம் நகர்வதாக காணப்படுகிறது. இந்தப் படம் கண்டிப்பாக ஓடிடி ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X