Navarasa: உலகின் உயரமான கட்டிடத்தில் அட்டகாச விளம்பரம்.. நவரசாவை சுற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு நவரசா ஆந்தாலஜி வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை எடுக்காத அளவுக்கு 9 இயக்குநர்கள் இணைந்து 9 கதைகள் கொண்டு சூர்யா, விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இந்த ஆந்தாலஜி உருவாகி இருக்கிறது.

உலகத்திலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அட்டகாச விளம்பரமும் அரங்கேறியிருக்கும் நவரசா பற்றி ஏகப்பட்ட ஆச்சர்யமான விஷயங்களும் உள்ளன.

8 மாத குழந்தையை இதய நோயிலிருந்து மீட்க உதவுங்களேன் ப்ளீஸ்

நவரசா ரிலீஸ்

நவரசா ரிலீஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நவரசா இன்று நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நண்பகல் 12.30 மணிக்கு இந்தியாவில் வெளியாகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த ஆந்தாலஜி படம் வெளியாகிறது.

கடைசி படம்

கடைசி படம்

நவரசாவில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் சூர்யாவை முன்னிலை படுத்தியே இந்த ஆந்தாலஜி பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணைந்துள்ள கதைக்கு கிட்டார் கம்பி மேல் நின்று என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆந்தாலஜியில் கடைசி 9வது கதையாக சூர்யாவின் கதை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போதுதானே மொத்தத்தையும் ரசிகர்கள் பார்ப்பார்கள்!

சம்பளம் வாங்கவில்லை

சம்பளம் வாங்கவில்லை

கொரோனா பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட சினிமா துறைக்கு உதவும் முயற்சியாகவே இந்த நவரசா எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்க எந்த ஒரு முன்னணி நடிகர்களும் சம்பளமே வாங்கவில்லை என்றும், இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களும் காசு வாங்காமல் உழைத்து உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

6 மாசத்துக்கு பணம்

6 மாசத்துக்கு பணம்

நெட்பிளிக்ஸில் இன்று வெளியாகவுள்ள நவரசா மூலம் கிடைக்கும் வருமனம் மூலம் 10,500 ஃபெஃபெஸி தொழிலாளர்கள் மற்றும் 1000 தியேட்டர் புரொஜக்‌ஷனர்களுக்கு மாதம் ரூ. 1500 என சுமார் 6 மாதங்கள் ஊக்கத் தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த நல்ல நோக்கத்திற்காகவே இப்படி ஒரு பிரம்மாண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

புர்ஜ் கலிஃபாவில்

புர்ஜ் கலிஃபாவில்

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று இரவு நவரசா படத்தின் விளம்பரம் மின் விளக்குகள் மிளிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உலகளவில் மிகப்பெரிய விளம்பரத்தோடு இந்த ஆந்தாலஜி இன்று வெளியாகிறது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் புது லுக்

சூர்யாவின் புது லுக்

நவரசாவின் ரிலீஸை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் செய்து வரும் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவின் புதிய லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதற்கும் துணிந்தவன் பட கெட்டப்பில் நடிகர் சூர்யா தோற்றமளிக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா படத்தில் 6 பாடல்கள்

சூர்யா படத்தில் 6 பாடல்கள்

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளார். மொத்தம் 45 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த கதையில் அதிக பட்சமாக 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இசை பிரியரான சூர்யாவின் வாழ்க்கையை எப்படி ஒரு பெண் மாற்றுகிறார் என்பதை பாடல்கள் மூலமாகவே கூறியுள்ளாராம் கெளதம் மேனன்.

பஸ் ஸ்டாண்டு விளம்பரம்

பஸ் ஸ்டாண்டு விளம்பரம்

நெட்பிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷனை இதுவரை பெறாத பல தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த நவரசாவை பார்க்க நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களிலும் நவரசாவின் விளம்பரங்கள் கண்ணை பறிக்கும் விதமாக களை கட்டியுள்ளன.

Recommended Video

எனது 15 வருட சினிமா போராட்டம் | Director Sarjun KM exclusive | Filmibeat Tamil
டாப் நடிகர்கள்

டாப் நடிகர்கள்

சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், பாபி சிம்ஹா, அதர்வா, பிரசன்னா, கெளதம் மேனன், யோகி பாபு, பார்வதி, அஞ்சலி, அதிதி பாலன், ரேவதி, ரித்விகா, ரம்யா நம்பீசன், டெல்லி கணேஷ் என பல டாப் நடிகர்கள் இந்த ஆந்தாலஜியில் நடித்துள்ளனர்.

9 இயக்குநர்கள்

9 இயக்குநர்கள்

பிரியதர்ஷன், வசந்த், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 குறும்படங்கள் கொண்ட தொகுப்பாக நவரசா ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் இன்று வெளியாகிறது. நிச்சயம் தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே இன்று திரும்பி பார்க்கும் அளவுக்கு புரமோஷன்கள் நடைபெற்று வருகின்றன. 9 கதைகளும் எப்படி இருக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X