Eleven OTT: ட்வின்ஸ் த்ரில்லர்.. ஓடிடி ரசிகர்களை மிரள விட்ட ‘லெவன்’ .. நவீன் சந்திரா நடிப்பு எப்படி?

சென்னை: நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'Eleven' திரைப்படம், Tentkotta OTT மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் தியேட்டரில் விஜயகாந்த் மகன் நடித்த படை தலைவன் படம் மட்டுமே வெளியானது. அதற்கு முந்தைய வாரம் வெளியான படங்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் ஓடிடியில் ஏகப்பட்ட படங்கள் ரசிகர்களுக்காக வெளியாகி உள்ளன.

இயக்குநர் சுந்தர் சி -யின் உதவி இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்த, 'லெவன்' திரைப்படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

Naveen Chandra s Eleven movie thrills OTT audience recently with a super twist and ultimate climax
Photo Credit:

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே லெவன்' படத்தின் கதை!

படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்க முடியாத Climax காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத திரைப்படமாக லெவன் ரசிகர்களை மிரட்டுகிறது. பல விமர்சகர்களால் பாராட்டப்பட்ட லெவன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு தேதி வெளிவந்ததிலிருந்து, த்ரில்லர் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து அதன் வெற்றியை டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்வின்ஸ் என்கிற விஷயத்தை இயக்குநர் இந்த படத்தில் எடுத்துக் கொண்ட விதம் முதல் பாதியை விட படம் 2ம் பாதியில் மிகப்பெரிய தாக்கத்தையும் பரபரப்பையும் கூட்டுகிறது. தியேட்டரில் வெளியான இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த லெவன் படத்தை மக்கள் வீட்டில் இருந்தே பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

டிடி நெக்ஸ்ட் லெவல், ஏஸ், லெவன், சமந்தாவின் சுபம் என வரிசையாக பல படங்கள் கடந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு மெகா விருந்தாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X