டெஸ்ட் படத்துலயே உருப்படியான விஷயம்.. மாதவன் நெஞ்சு மேல நயன்தாரா படுத்திருக்குற சீன்.. செம கெமிஸ்ட்ரி!
சென்னை: சசிகாந்த் இயக்கத்தில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியான டெஸ்ட் படத்தை பலரும் பார்த்து வருகின்றனர். அந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. சீர்யல் போல உள்ளதாகவும், டெஸ்ட் மேட்ச் பார்க்கவே பொறுமை வேண்டும், அந்தளவுக்கு பொறுமை இருந்தா இந்த படத்தை பாருங்க என விமர்சகர்கள் கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.
மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மீன் என முன்னணி நடிகர்களை வைத்து இந்த படத்தை சசிகாந்த் இயக்கியுள்ளார். பெரிய படமாக வந்திருக்க வேண்டிய இந்த படம் இயக்குநரின் சொதப்பல் காரணமாக ஓடிடியில் சுமாரான படமாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், படத்தை விட படத்தில் மாதவன் மற்றும் நயன்தாரா இடையே உள்ள கெமிஸ்ட்ரி அற்புதமாக இருந்தது என்றும் மாதவனை கட்டிப்பிடித்துக் கொண்டும் அவரது நெஞ்சு மேல ஏறி நயன்தாரா படுத்திருக்கும் காட்சிகளை எல்லாம் இயக்குநர் செதுக்கியுள்ளார் என்றும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
சூப்பர் படம் - சூரமொக்கை: ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த்தின் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் படம் என்றும் சூரமொக்கை என்றும் விமர்சனங்கள் குவியும். அந்தளவுக்கு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் சசிகாந்த் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. படம் நல்லா இருக்குன்னு ஒரு கூட்டமும், நல்லா வந்திருக்க வேண்டிய படம் என ஒரு கூட்டமும் நல்லாவே இல்லை ரொம்ப போர் அடிக்குது என இன்னொரு கூட்டமும் விமர்சித்து வருகின்றனர்.
மாதவன் - நயன்தாரா கெமிஸ்ட்ரி: இதற்குமுன் மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் எப்படி இப்படியொரு ஜோடி மிஸ் ஆனது என ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு டெஸ்ட் படத்திலும் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்களை அந்தளவுக்கு ஈர்த்துள்ளது. விக்ரம் வேதா படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் - மாதவன் கெமிஸ்ட்ரிக்கு பிறகு மாதவனுக்கு சரியான ஜோடியாக டெஸ்ட் படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் என்கின்றனர்.
நெஞ்சுல படுத்துக்கொண்டு: நயன்தாராவை மாதவன் போட்டு அடிப்பதும், மாதவனை நயன்தாரா போட்டு அடிப்பதுமென இருவருக்கும் சமமான வாக்குவாதங்கள் மற்றும் அடிதடி காட்சிகள் கொடுக்கப்பட்டாலும், அதையும் தாண்டி மாதவனை காதலுடன் நயன்தாரா கட்டிப்பிடிப்பதும், அந்த நைட் பிரியாணி மேட்டரும், மாதவன் நெஞ்சின் மேல் நயன்தாரா படுத்திருக்கும் அந்த சீனும் ரசிகர்களை ரொம்பவே டச் செய்துவிட்டது. இருவரும் சேர்ந்து இன்னும் சில படங்களிலும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர்.

பாவம் மீரா ஜாஸ்மீன்: மாதவனுக்கு ஜோடியாக ஆயுத எழுத்து படத்தில் "சண்டக்கோழி" பாடலில் எல்லாம் மீரா ஜாஸ்மீன் அப்படி நடித்திருப்பார். பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மீன் கம்பேக் என்றதும் ரசிகர்கள் அவருடைய கதாபாத்திரத்தை ரொம்பவே எதிர்பார்த்த நிலையில், அவருக்கான ஸ்பேஸ் இந்த படத்தில் பெரிதாக கிடைக்கவில்லை என்பது மீரா ஜாஸ்மீன் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது. இந்த வாரம் திரையரங்குகளில் பெரிதாக எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், ஓடிடியில் ரசிகர்கள் டெஸ்ட் படத்தை கொஞ்சம் பொறுமையுடன் பார்த்து தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். டெஸ்ட் படம் ஏமாற்றினாலும் முன்னணி நடிகர்களான சித்தார்த், மாதவன், நயன்தாரா நடிப்பு நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











