OTT: ஒன்னு பிளஸ் எட்டு 9.. நயன்தாராவின் ஆவணப்படம் ஒருவழியா ஓடிடியில்.. ரிலீஸ் தேதி இதோ!

சென்னை: நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் ரெசார்ட் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Nayanthara Beyond The Fairy Tale எனும் டைட்டிலில் உருவான இந்த ஆவண திரைப்படம் 2 ஆண்டுகள் தாமதமான நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

nayanthara netflix

நயன்தாராவின் ஆவணப்படம்: நயன்தாரா குழந்தை பருவத்திலிருந்து குமரியாக வளர்ந்து காதல் வலையில் விழுந்து பல சந்தோசங்களையும் சோகங்களையும் சந்தித்து சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனைத்து கதைகளையும் ஆவணப்படமாக ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறார்.

எப்போ ரிலீஸ்: வரும் நவம்பர் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக இந்த ஆவணப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. N என்கிற எழுத்தில் ஆரம்பிப்பதாலே நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இந்த ஆவணப்படத்தை வெளியிடும் உரிமையை பெரிய தொகைக்கு நயன்தாரா விற்றதாக கூறுகின்றனர்.

அன்னபூரணி பஞ்சாயத்து: கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் தியேட்டர்களில் பெரிதாக ஓடாத நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. நார்த் சைடில் கடவுள் ராமரை எதிர்த்து விட்டார் நயன்தாரா என்றும் லவ் ஜிகாத்தை ஆதரிப்பது போல நிலேஷ் கிருஷ்ணா படம் இயக்கியுள்ளார் என்றும் சர்ச்சை வெடித்த நிலையில் அதிரடியாக அந்த படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதி நடிகை நயன்தாரா மன்னிப்பு கடிதமும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் பரிசு: நடிகை நயன்தாராவின் பிரைவேட் வாழ்க்கை இதுவரை பிரைவேட்டாகவே இருந்து வந்த நிலையில், முதல் முறையாக மனம் திறந்து தன்னை வெளிப்படுத்தப் போகிறார் நயன்தாரா. பல்வேறு சுவாரஸ்ய தருணங்களையும் தனது வாழ்க்கையை மாற்றிய தருணங்களையும் மனிதர்களையும் பற்றி பேசியுள்ள ஆவணப்படம் பிறந்தநாள் பரிசாக வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X