நயன்தாரா திருமண வீடியோ படத்தை இவர் இயக்கவில்லையா?..கவுதம் மேனன் சொல்லும் புதுக்கதை

சென்னை: தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, இன்று தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் டூயட் பாடியுள்ள நயன்தாரா, இறுதியாக ரியல் லைஃப்பில் விக்னேஷ் சிவனுக்கு ஜோடியானார். சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா, இன்று எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கிவிட்டு கெத்தாக வலம் வருகிறார்.

நெட்பிளிக்ஸில் திருமண வீடியோ

நெட்பிளிக்ஸில் திருமண வீடியோ

நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் அவர் நடித்துள்ள காட்ஃபாதர், மலையாளத்தில் கோல்ட் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில், 7 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உட்பட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிப்பரப்பாகும் என தகவல் வெளியாகியிருந்தது.

கெளதம் மேனன் விளக்கம்

கெளதம் மேனன் விளக்கம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்த திருமண நிகழ்வுகளை கெளதம் மேனன் இயக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனால் விரைவில் நயன்தாரா திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அது இப்போது உண்மையில்லை வதந்தி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நயன்தாரா ஆவணப்படம்

நயன்தாரா ஆவணப்படம்

பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டிக் கொடுத்துள்ள கெளதம் மேனன், "நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிகளை நான் இயக்கவில்லை. ஆனால், அவரது சிறுவயதில் கடந்து வந்த முக்கியமான தருணங்களை ஆவணப் படமாக இயக்கியுள்ளேன். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு 'Nayanthara Beyond The Fairytale' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவின் சிறுவயது புகைப்படங்களுடன் அவரது திருமண போட்டோக்கள், வீடியோக்களும் இருக்கும், விக்னேஷ் சிவனும் இருப்பார்" எனக் கூறியுள்ளார். நயன்தாராவின் திருமண வீடியோ எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் புதிதாக கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X