Don't Miss!
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Automobiles
இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம்!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
“12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம்“… நயன்தாராவின் ‘O2’ டீசர் எப்படி இருக்கு?
சென்னை : நயன்தாரா நடிக்கும் 'O2' படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'O2' .
இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஜீ தமிழின் சூப்பர் குயின் ஷோ... யாரு டைட்டிலை வின் பண்ணியிருக்காங்க பாருங்க!

‘O2' திரைப்படம்
'O2' திரைப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனின் தாயாக நடித்து வருகிறார். இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி உள்ளது. அந்த டிரைலரின் ஆரம்பத்தில், சைரன் சத்தத்துடன் போலீஸ் வண்டியிலிருந்து இறங்கும் போலீஸ், பஸ் கொச்சிக்கும் போகல...நம்மல தாண்டியும் போகல அப்போ பஸ் எங்கத்தான் போய் இருக்கும் என்று கேட்கிறார்.

12 மணி நேரம் உயிருடன் இருப்போம்
அப்போது, பேருந்து மண்ணுக்குள் புதைந்து இருப்பது போல காட்டப்படுகிறது. ஒரு பைப் வழியாக... ப்ளீஸ் ஹெல்ப், யாராவது காப்பாத்துங்க என்று கத்துகின்றனர். அப்போது பதற்றப்படாமல், சண்டை, போடாமல், அமைதியா இருந்தா இன்னும் 12 மணி நேரம் நாம் அனைவரும் உயிருடன் இருப்போம் என்று கூறுகிறார்.

த்ரில்லர் திரைப்படம்
நயன்தாரா, தனது மகனுக்கு இருக்கும் சுவாச பிரச்சனை காரணமாக தனது, மகளுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை உடன் வைத்து இருக்கிறார். மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொள்ளும் சக பயணிகள் குறி வைப்பதை அம்மாவான நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை. விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விரைவில் ஓடிடியில்
இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது. இன்று காலை வெளியான இப்படத்தின் டிரைலர் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.