விக்னேஷ் சிவன் எப்படி உட்காரணும்னு கூட நயன்தாரா முடிவு பண்றது நல்லா இல்லை.. இது ஆணவப்படம்!
சென்னை: நயன்தாராவின் ஆவணப்படம் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இத்தனை ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் பலர் நயன்தாராவின் சமீபத்திய தனுஷை தாக்கிய கடிதம் மற்றும் ஆவணப்படத்தை பார்த்துவிட்டு பிறந்தநாள் அதுவுமா நயன்தாராவை வாழ்த்துவதற்கு பதில் திட்ட ஆரம்பித்து விட்டனர்.
தன்னுடைய எக்ஸ் காதலர்கள் குறித்து பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் செய்தது தான் தவறு என்றும் தன்னுடைய பக்கத்தில் மட்டுமே நியாயம் இருப்பதாகவும் நயன்தாரா தமிழிலேயே டப் செய்து பேசியிருப்பது பலரையும் எரிச்சல் அடைய வைத்துவிட்டது.

ஆவணப்படத்தில் கூட ரியாலிட்டி இல்லை என்றும் அனைத்தும் செயற்கையாகவே உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன், நெல்சன், விஜய் சேதுபதி மட்டுமே அவர்களது சொந்தக் குரலில் பேசியுள்ளனர். அனைத்தையும் தாண்டி விக்னேஷ் சிவனை வீட்டில் எப்படி உட்கார வேண்டும் என்பது கூட நயன்தாராவின் விருப்பமாக இருப்பது எல்லாம் ரொம்பவே ஓவர் என விமர்சனங்கள் குவிந்துள்ளன.
கொஞ்சம் திருமணம் நிறைய அழுகாச்சி டிராமா: ஹன்சிகாவின் திருமண டாக்குமெண்டரி கூட இப்படி இல்லை என்றும் ஆரம்பத்தில் இருந்தே நயன்தாராவின் அழுகாச்சி டிராமா தான் அதிகம் உள்ளதாகவும் நயனை பற்றிய தனித்துவமான விஷயங்களையும் பர்சனல் பக்கத்தையும் பெரிதாக இந்த Beyond the Fairy Tale ஆவணப்படத்தில் அறிந்துக் கொள்ள முடியவில்லை என்றும் திருமண டெக்கரேஷன், திருமணம், பிரபலங்களின் வாழ்த்து மழை, திருமண பந்தி என பெரிதாக திருமணத்தைக் காட்டாமல் விக்கி நயனின் ரொமான்ஸ் மற்றும் அழுகாச்சி டிராமா தான் அதிகம் இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மனக்குமுறலை கொட்டிய விக்னேஷ் சிவன்: சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது போல நயன்தாரா வீட்டில் தன்னை எப்படி நடத்துகிறார் என்றும் தனக்குப் பிடிக்காத கல் பென்ச்சை வாங்கி வைத்துக் கொண்டு இது கம்ஃபர்டபிளாக உள்ளது என்று சொல்வதும் இதில், குஷன் இருந்தால் நல்லா இருக்குமே என சொன்னாலும் இது வசதியாக இல்லையா? என நயன்தாராவையே ஒரு செகண்ட் சந்திரமுகியாக மாற்றிக் காட்டி கொசு அடிப்பது போல கொசு இல்லாமலே தன்னை எப்படி எல்லாம் அடிக்கிறார் என்பதையும் போட்டு உடைத்து விட்டார்.
உட்கார கூட அனுமதியில்லையா?: மேலும், அந்த பெஞ்சில் நான் இப்படி உட்கார்ந்தால் கூட பிடிக்காது என விக்னேஷ் சிவன் சொல்ல, உடனடியாக விக்கியின் காலை நயன்தாராவே இறக்கிவிடும் காட்சிகளும் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 100 சதவீதம் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அவரே பார்த்து பார்த்து வாங்கிப் போட்டிருக்கிறார். அதனை நான் அழுக்காக்காமல் பார்த்துக் கொள்வது தான் என் வேலை என விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

கணவருக்கும் ஃப்ரீடம் கொடுங்க: நயன்தாரா பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என நினைப்பது எல்லாம் சரிதான். ஆனால், கணவருக்கும் கொஞ்சம் ஃப்ரீடம் கொடுங்க லேடி சூப்பர் ஸ்டார். உங்களை பற்றிய குறைகளை கூட அவர் எவ்வளவு அழகாக சிரித்துக் கொண்டே வஞ்சபுகழ்ச்சி அணிபோல உங்களை வைத்துக் கொண்டே சொல்லிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications