நயன்தாராவின் ஆவணப்படம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனையா?.. வெளியான புதிய தகவல்
சென்னை: நடிகை நயன்தாரா சில நாட்களுக்கு முன்பு தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அதனை ஒருதரப்பினர் நயனின் கல்யாண கேசட் என்று கிண்டல் செய்தார்கள். இன்னொரு தரப்பினரோ மிக சிறப்பாக அந்த டாக்குமெண்ட்டரி இருந்ததாக கூறினார்கள். இதற்கிடையே 25 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தனது ஆவண படத்தை நயன் விற்றதாக கூறப்பட்டது.
கேரளாவில் பிறந்து தமிழ் திரையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நயன்தாராவுக்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். தனது திரையுலக வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகளையும், சில துரோகங்களையும் சந்தித்த அவர் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தார். இதனாலும் அவருக்கென ரசிகர்கள் பெருக தொடங்கினார்கள். வெறும் அழகு மட்டுமில்லாமல் தேவையான திறமையும் கொண்டிருந்ததால் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலிக்கு நகர்ந்தார்.

காதல் டூ கல்யாணம்: தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அதனையடுத்து சில வருடங்கள் ஒரே வீட்டில் லிவிங்கில் அவர்கள் இருந்தார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
தீவிர கட்டுப்பாடுகள்: அந்தத் திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் யாரையும் நயன் அழைக்கவில்லை. அதேபோல் திருமணம் நடக்கும் இடத்துக்கு வருபவர்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது அப்போதே பெரிய சர்ச்சையாக மாறியது.மேலும் கல்யாணத்தை வைத்து நயனும், விக்னேஷும் கல்லா கட்டுவதற்காகவே இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதெல்லாம் ரொம்ப ஓவர் என்று ஓபனாகவே பேசினார்கள்.
நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்பனை: அவர்கள் சொன்னது போலவே தனது திருமண நிகழ்வுகள் தொடர்பான வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் விற்றார் நயன். அதுமட்டுமின்றி தன்னுடைய வாழ்க்கை பயணத்தையும் சேர்த்து ஆவண படமாகவே மாற்றிவிட்டார். அதில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டார்கள் விக்கியும், நயனும். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் Nayanthara Beyond The Fairy Tale ட்ரெய்லரில் மூன்று நொடிகள் நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இடம்பெற்றிருந்தது.
80 கோடி ரூபாய்: அதனையடுத்து பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது குற்றஞ்சாட்டினார் நயன். மேலும் தனுஷை கடுமையாக விமர்சித்து மூன்று பக்க அளவில் கடிதமும் எழுதியிருந்தார். இந்த விவகாரம்தான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி முதலில் இந்த ஆவணப் படத்தை நெட்ஃப்ளிக்ஸுக்கு 25 கோடி ரூபாய்க்கு விற்றதாக கூறப்பட்ட சூழலில்; அதெல்லாம் இல்லை 80 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது 80 கோடி ரூபாய்க்கு விற்பனையா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. 80 கோடி ரூபாய் மதிப்புக்கு அந்த ஆவணப் படத்தில் எதுவுமே இல்லை. வேண்டுமென்றே இதனை சிலர் கிளப்பிவிடுகிறார்கள் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கிடையே நயன்தாரா அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications