Test OTT: நயன்தாரா 'டெஸ்ட்'டில் பாஸாவாரா? ஓடிடியில் எத்தனை மணிக்கு வருதுனு தெரியுமா?

சென்னை: மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருகதாஸ் என பலர் நடித்துள்ள திரைப்படம் டெஸ்ட் இன்று ஓடிடியில் வெளியாகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை, தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகை நயன்தாராவிற்கு கல்யாணம் ஆகியதில் இருந்தே நேரம் சரியில்லை என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த படமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், அடுத்து எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கும் படம் தான் டெஸ்ட். சென்னையில் நடந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது நடந்த ஒரு ஒரு சம்பவத்தை வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Nayanthara test OTT OTT

நயன்தாராவின் டெஸ்ட்: இந்த டெஸ்ட் திரைப்படம் ஓடிடியில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி டெஸ்ட் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 4ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது. இதனால், இந்த படத்தைபார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சாதாரண விஷயம் இல்லை: இத்தரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சித்தார்த், நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். அனைவருக்கும் பிடிப்பது போல, எனக்கும் கிரிக்கெட் என்பது பிடித்தமான விளையாட்டு. இந்த படத்தில் நடிப்பதற்காக, தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட்டராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.

மூக்குத்தி அம்மன் 2: தற்போது நயன்தாரா சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை அண்மையில் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ரெஜினா, மீனா, யோகி பாபு, மைனா நந்தினி என பலர் நடித்து வருகின்றனர். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X