நயன்தாராவின் டெஸ்ட்.. படக்குழு எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தன. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் நயன்.

nayanthara ott test

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பக்கம் நயன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

பிஸியானாலும் அம்மாதான்: அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அது அவரது 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்திலும் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் தனது மகன்கள், கணவருடன் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார்.

டெஸ்ட் ரிலீஸ்: டெஸ்ட் படத்தில் நயன்தாராவுடன் சித்தார்த், மாதவன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி வெளியாகும் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X