கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஓடிடி ராணியாக மாறும் லேடி சூப்பர் ஸ்டார்.. நெட்பிளிக்ஸும் நயன்தாராவும்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரு படங்களை நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கொரோனா லாக்டவுன் காலத்தில் எங்களுக்கு வேறு வழி தெரியல ஆத்தா என சூர்யாவும் ஜோதிகாவும் ஓடிடியை நம்பினர். அதன் பின்னர் தொடர்ந்து சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் மற்றும் கடந்த ஆண்டு பெரிய பட்ஜெட்டில் வெளியான கங்குவா உள்ளிட்ட படங்களை மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை முற்றிலுமாக குறைத்து விட்டனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் பல டைரக்ட்டாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு ரகு தாத்தா படத்தை தியேட்டரில் அவர் வெளியிட்டும் அந்த படம் வசூல் அள்ளவில்லை. இந்நிலையில், நடிகை நயன்தாரா சமீப காலமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தை மலைபோல் நம்பத் தொடங்கியுள்ளார் என்கின்றனர்.

netflix

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பல படங்களின் அறிவிப்புகள் வெளியான நிலையில், நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் வெளியானது.

போன வருஷம் சம்மருக்கு: எஸ். சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த 'டெஸ்ட்' திரைப்படம் போன வருஷம் சம்மருக்கே தியேட்டரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் என்ன ஆனது என தெரியவில்லை. அந்த படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற நெட்பிளிக்ஸ் நெக்ஸ்ட் நிகழ்ச்சியில் நயன்தாராவின் 'டெஸ்ட்' திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

நெட்பிளிக்ஸும் நயன்தாராவும்: நயன்தாரா நடித்து ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய அன்னபூரணி திரைப்படம் தியேட்டரில் வெளியான நிலையில், அந்த படம் பெரிதாக போகவில்லை. உடனடியாக நெட்பிளிக்ஸில் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. ஆனால், அதன் பின்னர் அந்த படத்தை பார்த்த வட இந்தியர்கள் இந்து கடவுளான ராமருக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகவும் லவ் ஜிகாத்தை அந்த படம் ஊக்குவிப்பதாக சொல்லி வெடித்த சர்ச்சை காரணமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் பஞ்சாயத்தில் இருந்த நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அவரது பிறந்தநாளில் வெளியானது. அந்த ஆவணப்படத்திற்கு எதிராக தனுஷ் தொடுத்துள்ள வழக்கு நெட்பிளிக்ஸுக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இந்நிலையில், நயன்தாராவின் அடுத்த படமும் நெட்பிளிக்ஸில் வெளியாக காத்திருக்கிறது.

இனிமேல் இப்படித்தானா?: ரிலீஸ் தேதி அறிவிக்காமல் விரைவில் என்கிற அறிவிப்புடன் டெஸ்ட் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் அறிவிப்பு டீசர் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் அரை டஜன் கணக்கான உமன் சென்ட்ரிக் படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடியில் தான் வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கீர்த்தி சுரேஷின் 'அக்கா' படமும் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது கூடுதல் தகவல். ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களின் படங்களை மக்கள் தியேட்டருக்கு சென்று பார்க்க அதிக ஆர்வம் செலுத்தாத நிலையில், தான் ஹீரோயின்கள் ஓடிடியை நாடுகின்றனர் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X