OTT Review: விபச்சார விடுதியில் இருந்து தப்பிக்கும் 3 பெண்கள்.. சாகடிக்க துரத்தும் வில்லன்.. வொர்த்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வரும் ஒரு தரமான வெப்சீரிஸாக மாறியிருக்கிறது Sky Rojo வெப்சீரிஸ். 2021ம் ஆண்டு முதல் சீசன் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட இளைஞர்களின் ஃபேவரைட் வெப்சீரிஸாக மாறிவிட்டது. 2023ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக 3 சீசன்கள் வெளியாகி உள்ளன.
ரைஃபிள் கிளப் படத்திற்கெல்லாம் செம இன்ஸ்பிரேஷனாக இந்த வெப்சீரிஸ் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ரைஃபிள் கிளப் படத்தில் எப்படி பெரிய வில்லனான அனுராக் காஷ்யப்பின் மகனை கிள்பில் டான்ஸ் ஆட வந்த நபர் மாடியில் இருந்து எட்டி உதைத்து தள்ளிவிட அதற்கு பழிவாங்க ஒவ்வொருத்தராக துரத்திக் கொண்டு வருவார்களோ அதே போல விபச்சார விடுதியின் ஓனரின் கழுத்தை உடைத்து விட்டு தப்பிக்கும் 3 பெண்களை கொல்ல போடப்படும் முயற்சிகளும் பதிலுக்கு அந்த பெண்கள் என்ன செய்தார்கள் என்பதும் தான் இந்த வெப்சீரிஸின் கதை.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வெப்சீரிஸ் இளைஞர்களை அதிகம் கவர காரணமே தாராளமாக கொட்டிக் கிடக்கும் அடல்ட் ஒன்லி காட்சிகள் தான். சீரியஸாக எல்லாம் வெப்சீரிஸ் போகாமல் செம ஜாலியாகவும் மூடேற்றும் வகையிலும் இருப்பதால் தான் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகின்றனர்.

ஸ்கை ரோஜோ கதை: லாஸ் நோவியாஸ் எனும் விபச்சார கிளப்பை ரோமியோ என்பவர் நடத்தி வருகிறார். அவர் தான் மெயின் வில்லனே. அவருக்கு அடியாட்களாக மோய்சஸ் மற்றும் கிறிஸ்டியன் என இருவர் உள்ளனர். அந்த விடுதிக்கு வரும் பணக்காரர்களுக்கு தங்களது உடலை இரையாக்கும் 3 விபச்சார பெண்களான கோரல், வெண்டி மற்றும் ஜினா ஆகிய 3 பெண்கள் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறி சாதாரண பெண்களாக வாழ வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரோமியோவை போட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகப் பார்க்கின்றனர். ரோமியோ சாகாமல் அவரது கழுத்து மட்டுமே அடிபடுகிறது. அவர் தனது அடியாட்களான மோய்சஸ் மற்றும் கிறிஸ்டியனை அனுப்பி அந்த 3 பெண்களையும் கொல்லச் சொல்கிறார். இதில், மோய்சஸ்க்கும் கோரலுக்கும் இடையே லவ் டிராக் ஒன்று உள்ள நிலையில், கடைசியில் என்ன ஆனது என்பது தான் இந்த ஸ்கை ரோஜோ வெப்சீரிஸ் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: முதல் சீசனின் ஒரு எபிசோடை பார்க்க ஆரம்பித்தால் இளைஞர்கள் 3 சீசனையும் மூச்சுவிடாமல் பார்த்து முடித்துவிடுவார்கள். போரடிக்காத வகையில் காமெடி, ஆக்ஷன், காமநெடி என அனைத்துமே கலந்துக் கட்டியிருக்கும் வொர்த் வர்மா வெப்சீரிஸ் தான் இந்த ஸ்கை ரோஜோ. நிர்வாணக் காட்சிகள், போதைப் பொருள் புழக்கம், ஆபாச காட்சிகள் என கொட்டிக் கிடப்பதால் குடும்பத்துடனும் குறிப்பாக குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடவும். விறு விறுப்பான திரைக்கதை ஒவ்வொரு எபிசோடையும் பார்க்க வைத்து விடுகிறது. ஸ்பானிஷ் மொழியில் உருவாக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. எஸ்தர் மார்ட்டினஸ் லோபேட்டா மற்றும் அலெக்ஸ் பினா இணைந்து இயக்கியுள்ளனர். வெரொனிகா சான்சேஸ், மிகுல் ஏஞ்சல் சில்வஸ்டர், லாலி எஸ்பாசிட்டோ, யானோ பிராடோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வில்லனை காருடன் புதைக்க இவர்கள் உருவாக்கிய அதே குழியில் இவர்கள் மூவரையும் அடைத்து கான்கிரேட் போட்டு மூடும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட். அதே போல வில்லன் இடத்துக்கே கோரல் சென்று அங்கே உள்ள பெண்களின் பாஸ்போர்ட்டுகளை எல்லாம் மீட்டுக் கொண்டு அவர்களிடம் கொடுத்துவிட்டு தப்பித்து போகச் சொல்வதும் வேறலெவல்.



Click it and Unblock the Notifications











