Dragon OTT: கயாடு லோஹர் ரசிகர்களே ரெடியா?.. ஓடிடியில் டிராகன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் மேனன், கே.எஸ். ரவிகுமார், விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

அதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அட்டகாசமான போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு விடாமுயற்சி உள்ளிட்ட பல பெரிய படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி ரசிகர்களை தங்கள் சந்தாதாரர்களாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

Netflix anounced Pradeep Ranganthan and Kayadu Lohar s Dragon OTT release date

குறைந்தபட்சம் மாதம் 199 ரூபாய் கட்டினால் டிவி மற்றும் மொபைலில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும். மற்ற ஓடிடி நிறுவனங்களை விட விலை அதிகம் என்றாலும், ஒவ்வொரு மாதமும் பல பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டாரை விட இதனை அதிகம் சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர்.

150 கோடி வசூல்: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த நிலையில் அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் வரை உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வமாகவே 100 கோடி கிளப்பில் டிராகன் படம் இணைந்ததை அர்ச்சனா கல்பாத்தி அறிவித்து வடக்குழுவுடன் வெற்றி விழாவையும் கொண்டாடி இருந்தார்.

கோட் படத்தை தொடர்ந்து: தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறி ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் ஷேர் கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது டிராகன் திரைப்படம் அதிக அளவு லாபத்தை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அள்ளிக் கொடுத்துள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படமும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு வசூல் வேட்டையை பெற்று தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராகன் ஓடிடி ரிலீஸ் தேதி: நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிராகன் படத்தை 25 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மார்ச் 21 ஆம் தேதி டிராகன் திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக காத்திருக்கிறது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை netflix நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. கயாடு லோஹரை ஆராதித்து வரும் ரசிகர்களுக்கு டிராகன் ஓடிடி ரிலீஸ் நல்ல விருந்தாக அமையும் என தெரிகிறது.

அமைதி காக்கும் விக்னேஷ் சிவன்: டிராகன் திரைப்படம் வெளியாகி பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ள நிலையில், சூட்டோடு சூடாக எல்ஐகே படத்தையும் விக்னேஷ் சிவன் இறக்குவார் என எதிர்பார்த்தால், அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல் ரொம்பவே விக்னேஷ் சிவன் அமைதி காத்து வருவது பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. மேலும், அப்பா மற்றும் மகன் ஒரே பெண்ணை காதலிப்பது தான் கதை என சோஷியல் மீடியாவில் சில தகவல்களும் டைம் டிராவல் படம் என்றும் வெளியான தகவல்களால் படம் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா? என்கிற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

FAQs
டிராகன் படத்தின் இசையமைப்பாளர் யார்?

லியோன் ஜேம்ஸ்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X