நாக சைத்தன்யா -சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் நெட்ஃபிளிக்ஸ்.. அடேங்கப்பா இவ்வளவு தொகை கைமாறியிருக்கா?

ஐதராபாத்: நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இடையில் விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக நடிகை சோபிதா துலிபாலாவை அவர் திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதனிடையே, அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கவுள்ள இவர்களின் திருமணம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இதற்கான சடங்குகளை இரு குடும்பத்தினரும் துவங்கியுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது.

naga chaitanya netflix ott

நாக சைத்தன்யா -சோபிதா துலிபாலா: சமந்தாவுடனான பிரிவுக்குப் பிறகு நடிகர் நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. இவர்கள் இருவருமே இது குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை, உண்மையை வெளிப்படுத்தவும் இல்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணத்தை அறிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான வகையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இதை நாக சைத்தன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா சமூக வலைதளம் மூலமாக அறிவித்திருந்தார்.

டிசம்பர் 4ம் தேதி திருமணம்: நிச்சயதார்த்தத்தின் அழகான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் எளிமையான முறையில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகின. தன்னுடைய தாத்தாவின் சிலையின் முன்பு தங்களது திருமணத்தை நடத்த விரும்பியதாக நாக சைத்தன்யா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதையடுத்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்கும் வகையில் நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி: அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்காக நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். இவர்களின் திருமணத்தையொட்டிய சடங்குகளும் துவங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியை ஒட்டிய புகைப்படங்களை சோபிதா துலிபாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இவர்களது திருமண கொண்டாட்டத்தை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தீபிகா படுகோன் -ரன்வீர் சிங்கின் திருமணத்தையும் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தன்னுடைய ஓடிடி தளத்தில் வெளியிட்டது.

திருமணக் கொண்டாட்டத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்: இவர்களின் திருமண கொண்டாட்டங்களை வெளியிட நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகையை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. நயன்தாரா -விக்னேஷ் சிவனுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ், அதற்காக 50 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம். இவர்களது திருமணம் ஏராளமான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த திருமணத்தை ஒளிபரப்புவதன் மூலம் அதிகமான வசூலை பெற முடியும் என்று netflix திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது 50 கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X