அமரன் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்?.. வரிசையா தூக்குறாங்களே பாஸ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

Netflix Bagged Sivakarthikeyans Amaran Movie OTT Rights

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.

எதிர்பார்ப்பில் அமரன்: அயலான் படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு படத்தின் பெயர், டீசர், போஸ்டர்கள் என அப்டேட்டுகளாக குவிந்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக்காக இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்முர பணிகள்: படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இப்போது மும்முரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அமரன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய தொகையை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறதாம். முன்னதாக அந்த நிறுவனம்தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களையும் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X