விஜய்யின் ஜன நாயகன் ஓடிடி உரிமம்.. அடேங்கப்பா இவ்வளவு தொகையா?.. எந்த நிறுவனம் வாங்கியிருக்கிறது?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் விஜய். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இதன் காரணமாக படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தில் கமிட்டானபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர் தனது கட்சியின் அரசியல் எதிரி திமுகதான் என்பதை பிரகடனப்படுத்தினார். ஆளுங்கட்சியை எதிர்க்கிறாரே என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்தார்கள்.
விளாசிய விஜய்: ஆனால் விஜய்யோ திமுகவை விமர்சிப்பதை விடவே இல்லை. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொள்ளாததால்; அந்த விஷயத்திலும் திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து பாஜகவின் பி டீம்தான் விஜய் என்று திமுகவினர் விமர்சனம் செய்தார்கள். அதுமட்டுமின்றி அவரது அரசியல் மூவ்மென்ட்டுகளையும் தொடர்ந்து கிண்டல் செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரந்தூர் பறந்த விஜய்: முக்கியமாக தனது அலுவலகத்துக்குள் இருந்துகொண்டே அரசியல் செய்கிறார் என்றும் விஜய்யை நோக்கி விமர்சன அம்புகள் வீசப்பட்டன. சூழல் இப்படி இருக்க அவர் அண்மையில் பரந்தூருக்கு சென்றார். பரந்தூர் சென்ற அவர் வழக்கம்போல் திமுகவை தாக்கி பேசினார். இதனால் அவர் மீது ரொம்பவே காட்டமாக இருக்கிறார்கள் திமுகவினர். முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
ஜன நாயகன் விஜய்: விஜய் அரசியலில் குதித்திருப்பதால் அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. முக்கியமாக அரசியல் ரீதியாக படம் இருக்குமா என்கிற சந்தேகமும் எழுந்திருந்தது. அதனை ஓரளவு உறுதிப்படுத்தும் விதமாகத்தான் படத்தின் போஸ்டர்களும் அமைந்திருந்தன. அதேசமயம் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பு ஒரு மேடையில் பேசியிருந்த ஹெச்.வினோத், இது எல்லோருக்குமான படமாக இருக்கும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
சிக்கல் வருமா?: படத்தை இந்த வருடத்தின் இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் களமிறங்கவிருப்பதால் 2026ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கவிருக்கிறார். அதேசமயம் தொடர்ந்து அவர் திமுகவை தாக்கி வருவதால்; ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஆளுங்கட்சியான திமுக தரப்பிலிருந்து ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்று அவரது ரசிகர்களும் கொஞ்சம் அச்சத்தில்தான் இருக்கிறார்கள்.
புதிய தகவல்: இந்நிலையில் ஜன நாயகன் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் திரையரங்க ரிலீஸ் உரிமையை தமிழ்நாட்டில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் ஓடிடி உரிமத்தை கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாகவும்; விரைவி அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











