இந்தியன் 2 டிஜிட்டல் உரிமம்.. போட்டிப் போடும் ஓடிடி நிறுவனங்கள்.. பெரிய தொகைக்கு புக் செய்தது யாரு?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் தைவான் போர்ஷன் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக படக்குழு தென்னாப்பிரிக்கா பயணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே நேதாஜி கனெக்ஷனை இந்தியன் 2 படத்தில் அதிகம் வைத்துள்ள நிலையில், காந்தி கனெக்ஷனுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு படக்குழு பயணிக்கிறதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்னமும் படப்பிடிப்பே முடியாத நிலையில், இந்தியன் 2 படத்தின் ஓடிடி விற்பனை சூடுபிடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தைவான் போர்ஷன் ஓவர்
கடப்பா, திருப்பதி என பீரியட் போர்ஷன்களை படமாக்கி வந்த இயக்குநர் ஷங்கர் செங்கல்பட்டு பகுதியில் சில நாட்கள் ஷூட்டிங் நடத்தினார். அதன் பின்னர் தைவானுக்கு சென்ற ஷங்கர் தாய்பெய் எனும் இடத்தில் 4 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இயக்குநர் ஷங்கரும் பை பை தாய்பெய் என்கிற போஸ்ட்டை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டார்.

அடுத்து தென்னாப்பிரிக்கா
இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தி பங்கெடுப்பதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அங்கேயும் புரட்சிப் போராட்டங்களை அவர் நடத்தினார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிலும் இந்தியன் 2 போர்ஷன்களை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை காந்தி கனெக்ஷன் ஏதாவது இருக்குமா என்கிற கேள்விகளும் இதனால் கிளம்பி உள்ளன.
ஓடிடி உரிமம்
இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமத்துக்காக பல பெரிய ஓடிடி நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருவதாகவும், அதில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு மற்ற அனைத்து தென்னிந்திய படங்களை விட அதிக தொகைக்கு இந்தியன் 2 படத்தை வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லியோ, ஏகே 62
60 நாட்களை கடந்து அடுத்த 60 நாட்கள் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் விஜய்யின் லியோ படம் முதல் இன்னமும் ஆரம்பிக்காமல் இருக்கும் அஜித்தின் ஏகே 62 உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமத்தை வாங்கி வைத்துள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் இந்தியன் 2 டிஜிட்டல் உரிமத்தையும் கைப்பற்றி இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











