OTT: அடேங்கப்பா.. அஜித்தின் துணிவு படம் ஓடிடி ரிலீஸுக்கு பெரிய தொகைக்கு விலை போயுள்ளதா?

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்தை அதிக தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளை படமாக நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

சர்வதேச ஓடிடி ஜெயண்ட் ஆன நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெறித்தனமான அஜித்

வெறித்தனமான அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் போனி கபூர், ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள படம் துணிவு. இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்பது போல படத்தை ஸ்ட்ராங்காக உருவாக்கி உள்ளாராம் இயக்குநர் ஹெச். வினோத். மங்காத்தா படத்திற்கு பிறகு நடிகர் அஜித் வெறித்தனமான நெகட்டிவ் ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவான சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா பாடல்கள் வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில், 3வது சிங்கிளாக இன்று "கேங்ஸ்டா" பாடல் மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த பாடலின் பாடல் வரிகளே அனல் தெறித்த நிலையில், பாடலும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் ரிலீஸ்

நெட்பிளிக்ஸில் ரிலீஸ்

பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் பிப்ரவரி மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதிக தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ள துணிவு படத்தை வாங்கி உள்ளது.

மணி ஹெய்ஸ்ட்டும்

மணி ஹெய்ஸ்ட்டும்

நெட்பிளிக்ஸில் தான் சர்வதேச அளவில் ஹிட்டான ஹெய்ஸ்ட் படமான மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம் உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பேங்க் ஹெய்ஸ்ட் படமான துணிவு படத்தையும் நெட்பிளிக்ஸ் ரொம்பவே விரும்பி வாங்கி உள்ளது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான பல தமிழ் படங்கள் சொதப்பிய நிலையில், ரசிகர்களை மீண்டும் கவர வேண்டும் என அஜித்தின் துணிவு படத்தை வாங்கி உள்ளது நெட்பிளிக்ஸ்.

70 கோடி

70 கோடி

சுமார் 70 கோடிக்கும் அதிகமான தொகைக்கு அஜித்தின் துணிவு படத்தி போஸ்ட் ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 12ம் தேதி துணிவு படம் வெளியாகும் நிலையில், காதலர் தினக் கொண்டாட்டமாக நெட்பிளிக்ஸில் பிப்ரவரி மாதம் துணிவு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X