GOAT OTT: ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டிய கோட்.. ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படத்திற்கு பிறகு தி கோட் படத்திற்காக விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். புகழ் பெற்ற ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை மிக அதிக தொகை கொடுத்து பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தளபதி விஜய்யின் 68வது படமான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அறிவிப்பு வெளியானது நாள் முதல், படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. இப்படத்தில், விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், ஜெயராம் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்து வருகின்றனர்.

Netflix has acquired the OTT rights of GOAT Movie

தளபதி விஜய்யின் கோட்: லியோ படத்திற்கு பின், மீண்டும் ஒரு மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதுமட்டும் இல்லாமல் விரைவில் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லவிருப்பதால், அவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவம் வகையில் கோட் திரைப்படம் இருக்கும் என்றும், இதற்காக வெங்கட்பிரபு ஒவ்வொரு காட்சியை பிளான் போட்டு செய்து வருகிறாராம். மேலும், கோட் டைட்டில் போஸ்டர், பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்த வெங்கட் பிரபு, விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஓடிடி உரிமை: இந்நிலையில் கோட் படத்தை வெளியிடும் உரிமையை பிரபல நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் லியோ படத்தை விடவும் தி கோட் படத்தின் உரிமைத் தொகையை மிக அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

Netflix has acquired the OTT rights of GOAT Movie

படத்தின் கதை: இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அதில் அப்பா விஜயாக நடிக்கும் கதாபாத்திரத்தின் நண்பர்களாக மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் கதாபாத்திரம் இருக்கும் என்றும், நடிகர் பிரசாந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அவர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ப்ளாஷ்பேக் காட்சியில் இவர்களும் டிஏஜிங் பிராசஸ் டெக்னாலஜியை பயன்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X