twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமேசான் பிரைம், ஹாட்ஸ்டாருக்கு கடும் டஃப் கொடுக்க களமிறங்கிய நெட்பிளிக்ஸ்.. அதிரடியாக குறைந்த விலை!

    |

    சென்னை: நெட்பிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்திருந்தாலே வசதி படைத்த ஆள் தான் என நினைக்கும் அளவுக்கு அதன் சப்ஸ்க்ரிப்ஷன் விலை மற்ற ஒடிடி தளங்களை விட ரொம்பவே காஸ்ட்லியாக இருந்த நிலையில், தற்போது அதிரடியாக அதன் சப்ஸ்க்ரிப்ஷன் விலை குறைந்துள்ளது.

    இந்தியர்கள் பலரும் ஒடிடி தளங்களை ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்ததை அறிந்து கொண்ட நெட்பிளிக்ஸ் நிர்வாகம் விலை பட்டியலில் பெரிய மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது.

    இன்று தண்டனை பெற்ற அந்த 6 பேர்....இவங்க தான் இன்று தண்டனை பெற்ற அந்த 6 பேர்....இவங்க தான்

    இந்திய ரசிகர்களை கவர நெட்பிளிக்ஸ் இந்தியா, தென்னிந்திய ரசிகர்களை கவர நெட்பிளிக்ஸ் சவுத் இந்தியா என ஒட்டுமொத்த இந்திய ஒடிடி ரசிகர்களையும் டார்கெட் செய்து வளைத்து போட்டு வருகிறது.

    ஒடிடி போட்டி

    ஒடிடி போட்டி


    சர்வதேச அளவில் ஒடிடி தளங்களின் பிக் பாஸ் ஆகவே நெட்பிளிக்ஸ் டாப் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜி5 மற்றும் ஏகப்பட்ட பிராந்திய ஒடிடி சேனல்கள் என பல்வேறு ஒடிடி தளங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
    லாக்டவுன் காரணமாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை ஒடிடி தளங்கள் பிடித்துள்ள நிலையில், ஒடிடி தளங்களுக்கு இடையே அதிக சப்ஸ்கிரைபர்களை பிடிக்கும் போட்டி சூடு பறக்கிறது.

    அமேசான், ஹாட்ஸ்டார் ஆதிக்கம்

    அமேசான், ஹாட்ஸ்டார் ஆதிக்கம்


    இந்தியாவில் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஐபிஎல், பிக் பாஸ் என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஜியோ மொபைல் ரீசார்ஜ் உடன் ஓராண்டுக்கான சந்தா கிடைப்பதால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அதிக அளவிலான சப்ஸ்கிரைபர்களை இந்தியாவில் கொண்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அமேசான் பிரைம் புதிய திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    ரொம்ப காஸ்ட்லி

    ரொம்ப காஸ்ட்லி

    ஆப்பிள் ஐபோன் போலத்தான் இந்த விவகாரத்தில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளமும் என்றே சொல்லலாம். மாத சந்தாவே 800 முதல் 1000 வரை இருப்பதால் மற்ற ஒடிடி தளங்களை விட இதன் சப்ஸ்கிரைபர்கள் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளனர். பல தரமான சர்வதேச படைப்புகள், மணி ஹெய்ஸ்ட், ஸ்க்விட் கேம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் வெப் தொடர்கள் என உலக ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்கள் இருந்தாலும் அதிக விலை காரணமாகவே அதன் சப்ஸ்கிரைபர்கள் குறைந்த அளவே உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.

    Recommended Video

    Squid Game (2021) Web Series Review in Tamil by Poster Pakiri | Filmibeat Tamil
    அதிரடி விலை குறைவு

    அதிரடி விலை குறைவு

    இந்நிலையில், தற்போது அதிரடியாக தனது பிளான்களை நெட்பிளிக்ஸ் குறைத்துள்ளது. ஏற்கனவே மொபைலில் மட்டும் பார்க்க மாத சந்தா ரூ. 199 இருந்த நிலையில், தற்போது மொபைல் மற்றும் டிவிக்களில் பார்க்கும் சந்தாவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான ரசிகர்கள் கூடிய விரைவில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிளான் விலை பட்டியல்

    பிளான் விலை பட்டியல்

    மொபைலில் பார்க்க மாத சப்ஸ்க்ரிப்ஷன் ரூ. 199ல் இருந்து ரூ. 149 ஆக மாற்றப்பட்டுள்ளது. மொபைல், டேப்ளட், கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்டவற்றில் நெட்பிளிக்ஸை பார்க்க மாத சந்தா பேசிக் பிளானின் விலை ரூ. 499ல் இருந்து ரூ. 199 என அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் பிளான் ரூ. 649ல் இருந்து ரூ. 499 என மாற்றப்பட்டுள்ளது. ப்ரீமியம் பிளானின் விலை ரூ. 799ல் இருந்து ரூ. 649 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Due to OTT platform clash Netflix India drops huge price in subscriptions plans to grab new audience all over India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X