twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிரடியான மாற்றங்களுடன் நெட்ஃபிளிக்ஸ்… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

    |

    சென்னை : கொரோனாவுக்கு முன்பு வரை இந்தியாவில் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

    கொரோனா பேரிடரால் வீட்டுக்குள் முடங்கிப் போன மக்கள் பெருவாரியாக ஓடிடியில் திரைப்படங்களையும், சீரிஸ்களையும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

    இதனால்,நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டார், ஜீ 5, ஆஹா, சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்கள் பெருகிவிட்டன. தற்போது நிலைமை சீரான பின்பும் ஓடிடி தளங்களில் அதிக அளவு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தி திரையுலகம் எனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்ன மகேஷ் பாபு.. இத்தனை கோடி சம்பளமா?இந்தி திரையுலகம் எனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்ன மகேஷ் பாபு.. இத்தனை கோடி சம்பளமா?

    நெட்ஃபிளிக்ஸ்

    நெட்ஃபிளிக்ஸ்

    உலக அளவில் மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதனால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

    டிசம்பரில் அமல்

    டிசம்பரில் அமல்

    நெட்ஃபிளிக்ஸ் தற்போது விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால், இனிவரும் காலங்களில் விளம்பரத்தை ஒளிபரப்ப உள்ளதாகவும். இந்த நடைமுறை டிசம்பர் மாதத்திற்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷேரிங் ஆப்சனில் மாற்றம்

    ஷேரிங் ஆப்சனில் மாற்றம்

    மேலும், ஒருவரிடம் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் இருந்தால், அவருடைய அக்கவுண்டை, மற்ற டிவைஸ்களில், யூசர் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து பயன்படுத்தலாம். தற்போது, வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்த, இந்த பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சனில் மாற்றம் செய்ய இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

    இக்கட்டான சூழ்நிலையில் நெட்ஃபிளிக்ஸ்

    இக்கட்டான சூழ்நிலையில் நெட்ஃபிளிக்ஸ்

    நெட்ஃபிக்ஸ் உலக அளவில் உள்ள மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய, புதிய வாடிக்கையாளர்களை சிறந்த திட்டங்களுடன் கவர்ந்திழுப்பதன் மூலமும், சில வழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேற முடியும் என்று அந்நிறுவனம் நம்புகிறது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்கள், டி.வி. ஷோக்களுக்காக செலவிடும் தொகையும் குறைக்க இருக்கிறது.

    English summary
    Netflix is to introduce New plan, customer shocked
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X