அதல பாதாளத்தில் நெட்பிளிக்ஸ்.. வீழ்ச்சியை ஈடுகட்ட புதிய திட்டம்!

சென்னை : நெட்ஃபிக்ஸ் முதல் காலாண்டை போல தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் சந்தாதாரர்களை இழந்ததாக அறிவித்துள்ளது.

ஓடிடி தளங்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகிறது.

Netflix lost nearly 1 million members subscribers in the June quarter

மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட்கேம் போன்ற உலகத் தரம் வாய்ந்த வெப் சீரீஸ்களை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007ம் ஆண்டு இணையத்தில் ஸ்டிரீமிங் வசதியை தொடங்கியது. நெட்ஃபிளிக்ஸ் ஸ்டிரீமிங் தொடங்கிய பத்து ஆண்டுகளில் 10 கோடி சந்தா தாரர்களை பெற்று அசுர வளர்ச்சி அடைந்தது.

Netflix இன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், வரலாற்றில் முதல் முறையாக ஜூன் காலாண்டில் கிட்டத்தட்ட 970,000 கட்டண சந்தாதாரர்களை இழந்துள்ளது. இது மேலும், இரண்டு மில்லியனாக அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தும் தகவலையும் வெளியிட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் முதல் காலாண்டை போல தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் சந்தாதாரர்களை இழந்ததாக அறிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கும் இந்நிறுவனம் பங்கு சந்தையிலும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியை சரிகட்ட மலிவு விலைச் சந்தாவை அறிமுகப்படுத்தி மேலும் அதிக சந்தாதாரர்களை தளத்திற்கு கொண்டுவர நெட்ஃப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான நஷ்டத்தை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதால் மலிவு விலைச் சந்தாவில் விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக, நெட்ஃபிளிக்ஸ் வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல் மற்றும் சோனி பிக்சர்ஸ் டெலிவிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் எடுக்கும் புதிய முயற்சியால், செப்டம்பரில் முடிவடையும் இந்த காலாண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

ஓடிடி நிறுவனங்களான டிஸ்னி மற்றும் ஆப்பிளின் கடுமையான போட்டி காரணமாகவும் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக தெரிகிறது. சந்தாதாரர்கள் தங்களது கணக்கு விவரங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்தால் கூடுதலாக அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X