twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெட்பிளிக்ஸ் சந்தா குறைக்கப்பட்டாலும்.. இன்னமும் அந்த விஷயத்தில் காஸ்ட்லிதான் எப்படி தெரியுமா?

    |

    சென்னை: வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் மணிக் கணக்கில் பொழுதை கழிக்க ஒடிடி தளங்கள் பெரிதும் உதவுகின்றன.

    தியேட்டருக்கு சென்று தான் புதிய படங்களை பார்க்க முடியும் என்பதையும் டிவி இருந்தால் தான் தொடர்களை காண முடியும் என்பதையும் ஒடிடி தளங்கள் அடித்து நொறுக்கி புதிய அத்தியாயத்தையே உருவாக்கி உள்ளன.

    உடல் வலிமையா மன வலிமையா? தாமரையின் அசர வைக்கும் நெஞ்சுரம் உடல் வலிமையா மன வலிமையா? தாமரையின் அசர வைக்கும் நெஞ்சுரம்

    இந்தியா மட்டுமின்றி சர்வதேச படைப்புகளையும் எந்தவொரு தணிக்கையும் இன்றி கண்டு ரசிக்க உதவும் மிகப்பெரிய ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்திய ரசிகர்களுக்காக அதிரடியாக அதன் சந்தாவை குறைத்துள்ளது பற்றியும் மற்ற போட்டி நெட்வொர்க்குகள் இந்தியாவில் என்ன விலையில் பயனாளர்களுக்கு சேவை வழங்குகின்றன என்பது குறித்தும் இங்கே விரிவாக பார்ப்போம்.

    குறைக்கப்பட்ட பிளான்

    குறைக்கப்பட்ட பிளான்

    மாதம் ரூ.899 செலுத்தினால் மட்டுமே நெட்பிளிக்ஸை பயன்படுத்த முடியும் என்கிற நிலை இருந்த நிலையில், இந்திய இளைஞர்களை டார்கெட் செய்து மொபைல் போனில் மாத சந்தா வெறும் ரூ.199 செலுத்தினால் போதும் நெட்பிளிக்ஸ் ஒடிடியை பார்க்க முடியும் என மாற்றியது. ஆனால், லேப்டாப், ஸ்மார்ட் டிவியில் பார்க்க அதிக கட்டணங்களை கட்ட இந்தியர்கள் தயாராக இல்லை. இதனால் இந்தியாவில் தற்போது அதிரடியாக மாத சந்தாவை நெட்பிளிக்ஸ் மாற்றி அமைத்துள்ளது.

    4 வகையான பிளான்

    4 வகையான பிளான்

    1. ரூ. 149க்கு வெறும் மொபைலில் மட்டும் நெட்பிளிக்ஸை பார்க்கும் பிளான்

    2. ரூ. 199க்கு நெட்பிளிக்ஸ் பேசிக் பிளான்

    3. ரூ. 499க்கு நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் பிளான்

    4. ரூ. 649க்கு நெட்பிளிக்ஸ் ப்ரீமியம் பிளான்

    என மொத்தம் 4 விதமான மாத சந்தாவை நெட்பிளிக்ஸ் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

    நெட்பிளிக்ஸ் ரூ. 149 பிளான்

    நெட்பிளிக்ஸ் ரூ. 149 பிளான்

    இந்த பிளானின் பெயரிலேயே வெறும் இதனை ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தெளிவாகி உள்ளது. இதற்கு முன்னதாக ரூ.199க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் பிளானின் விலை தான் ரூ. 149க்கு குறைக்கப்பட்டு இருக்கிறது. 480p கிளாரிட்டியில் மட்டுமே இதனை பார்க்க முடியும் ஆண்டுக்கு ரூ. 1,788 ஆகிறது.

    நெட்பிளிக்ஸ் ரூ. 199 பிளான்

    நெட்பிளிக்ஸ் ரூ. 199 பிளான்

    ரூ. 199 மாத சந்தாவில் மொபைல், டேப்ளட், கம்யூட்டர், லேப்டாப் மற்றும் டிவியில் நெட்பிளிக்ஸை பார்க்க முடியும். ஒரே ஒரு பயனாளர் மட்டுமே இந்த பிளானை பயன்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே சப்ஸ்க்ரிப்ஷனை பயன்படுத்த முடியாது. SD குவாலிட்டியில் தான் படங்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ரூ. 2,388 செலவாகிறது.

    நெட்பிளிக்ஸ் ரூ. 499 பிளான்

    நெட்பிளிக்ஸ் ரூ. 499 பிளான்

    ரூ. 199 பிளானில் இல்லாத சிறப்பம்சமாக நெட்பிளிக்ஸ் ரூ. 499க்கு வழங்கும் ஸ்டாண்டர்ட் பிளானில் ஒரே நேரத்தில் இருவர் அல்லது இரு ஸ்க்ரீன்களில் பயன்படுத்த முடியும். அதுவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த 1080p முழு ஹெச்.டி தரத்தில் படங்கள், வெப் தொடர்களை கண்டு ரசிக்க முடியும். ஆண்டுக்கு ரூ. 5,988 செலவாகிறது.

     ரூ. 649 பிளான்

    ரூ. 649 பிளான்

    நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் அதிகபட்சமான மாத சந்தாவாக இந்த ரூ. 649 பிளான் உள்ளது. அல்ட்ரா ஹெச்.டி (4K) தரத்தில் ஒரே நேரத்தில் 4 பேர் ஸ்க்ரீன்களை ஷேர் செய்து கொண்டு நெட்பிளிக்ஸின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 7,788 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜியோ மற்றும் வோடபோனின் போஸ்ட்பெய்ட் கனெக்‌ஷன்களுடன் நெட்பிளிக்ஸ் ஒடிடி கிடைக்கிறது.

    அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார்

    அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார்

    நெட்பிளிக்ஸ் விலை குறைக்கப்பட்டதாக கூறினாலும் இன்னமும் அது அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 7,788 வரை வசூல் செய்கிறது. ஆனால், அப்படியே அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் விலை பட்டியலை பார்த்தால் அதிகபட்ச ஆண்டு ப்ரீமியம் தொகையே ரூ. 1,499 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நெட்பிளிக்ஸ் ப்ரீமியத்தை பயன்படுத்த வேண்டுமானால் 4 பேருடன் இணைந்து கொண்டு ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷனை வாங்கினால் பர்ஸ் காலியாகாது.

    English summary
    Netflix India new plans details and compare with other top OTT networks like Disney Plus Hotstar and Amazon Prime premium plans rates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X