IC 814: The Kandahar Hijack சர்ச்சை.. இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்.. நெட்ஃபிளிக்ஸ் உறுதி!

மும்பை: அரவிந்த்சாமி, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியான IC 814: The Kandahar Hijack வெப்சீரிஸில் இந்துக்களின் பெயர்கள் தவறாக பயன்பட்டு இருப்பதாகக் கூறி வெடித்த சர்ச்சைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுப்பிய நோட்டீஸுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் கன்டென்ட் ஹெட் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நஸ்ருதின் ஷா, விஜய் வர்மா, அரவிந்த்சாமி, தியா மிர்ஸா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான வெப்சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது.

netflix ic 814 the kandahar hijack


1999ம் ஆண்டு காந்தஹாரில் இருந்து டெல்லிக்கு வந்துக் கொண்டிருந்த விமானத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடரும் நெட்ஃபிளிக்ஸ் சர்ச்சை: ஓடிடியில் வெளியாகும் படைப்புகளுக்கு பெரிதாக சென்சார் இல்லாத நிலையில், ஆபாச படங்களும், சர்ச்சைக்குரிய வெப் தொடர்களும் அதிகளவில் மக்கள் மத்தியில் குறிப்பாக ஸ்மார்ட் போன் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்துக்கு எதிராக புகார்கள் குவிந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அந்த படத்தை அதிரடியாக நீக்கினர். இந்த ஆண்டு வெளியான அமீர்கான் மகனின் மகாராஜ் படத்துக்கும் இதே போன்ற பிரச்சனைகள் வந்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த படம் வெளியாக கடைசியில் எந்தவொரு தடையும் பிறப்பிக்கவில்லை.

netflix ic 814 the kandahar hijack


காந்தஹார் ஹைஜாக் வெப்சீரிஸ் சர்ச்சை: நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து டெல்லிக்கு வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு பாகிஸ்தான் கொண்டு செல்ல திட்டமிடுகின்றனர். ஆனால், அதை அமிர்தசரஸில் தரையிறக்கம் செய்ய வைத்து தீவிரவாதிகளை இந்திய படையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்கும் கதையில் இந்துக்களின் பெயர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை வெடித்த நிலையில், நெட்ஃபிளிக்ஸை நிரந்தரமாக இந்தியாவில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் இந்த வெப்சீரிஸில் நடித்த தமன்னாவின் காதலர் விஜய் வர்மா, பாலிவுட்டின் மூத்த நடிகர் நசிரூதின்ஷா, நடிகை தியா மிர்ஸா மற்றும் நடிகர் அரவிந்த்சாமி உள்ளிட்டோருக்கு எதிரான கண்டனங்களும் வலுத்துள்ளன.

சரண்டரான நெட்ஃபிளிக்ஸ்: பிரச்சனை பெரிதளவில் வெடித்த நிலையில், மத்திய தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் இதுதொடர்பான விளக்கத்தை அளிக்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் கன்டென்ட் தலைவர் மோனிகா ஜெர்கில் உறுதியளித்துள்ளார். அதில், இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். இனிமேல், இதுபோன்ற சர்ச்சை எழாத வண்ணம் கதையின் கரு மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை முன்பே ஆராய்ந்து களைவதற்கான திட்டங்களை மேற்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X