உலகத்தை அச்சுறுத்திய கடத்தல் ராணி க்ரிசெல்டா.. எதற்கும் துணிந்தவள்.. கொலை மாஸ் சாரே
லாஸ் ஏஞ்சல்ஸ்: உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளன. உண்மை கதையை புனைவோடு சேர்ந்து ஒரு கதைகளை படிப்பதற்கும் அதே விறுவிறுப்பு படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இருந்தாலே தரமான சம்பவம் தான். அதுமாதிரியான ஒரு வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இத்தொடர் 70களில் உலகையே உலுக்கிய கடத்தல் ராணி க்ரிசெல்டா பற்றியது என்றும் கூறப்படுகிறது. ஒரு கிலோ போதை மருந்து இந்த உலகை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை இதில் காணலாம்.
கொலம்பியாவில் இருக்கும் ஒரு பெண் தனது கணவனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தனது 3 மகன்களுடன் மியாமி என்ற பகுதிக்கு செல்கிறார் க்ரிசெல்டா. கொலை செய்யப்பட்ட கணவன் போதை கும்பலின் தலைவன் என்பது தெரிந்ததும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை தரலாம். ஆனால், க்ரிசெல்டா அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளே கிடையாது. தப்பான வழியில் இருக்கும் கணவனை கொலை செய்து மியாமிக்கு சென்றிருக்கும் க்ரிசெல்டா திருந்தி ஒரு நல்ல வாழ்க்கையை மகள்களுடன் வாழப்போகிறார் என்றுதான் பார்ப்பவருக்கு தோன்றும். ஆனால், அங்கு தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி பாேதை கும்பலின் தலைவியாக மாறிவிடுகிறார்.

அவர் எப்படி தலைவி ஆகிறார், போதை கும்பலையை கட்டி காக்க ஒரு பெண் என்னென்ன திட்டமிடுகிறாள். அவரது கடந்த வாழ்க்கையில் நடந்த கொடூரமான சம்பவங்களை விளக்கும் கதைதான் க்ரிசெல்டா. இந்த வெப் தொடர் மொத்தம் 6 எபிசோடுகளாக நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.போதை மருந்து கும்பலில் தனி இடம் பிடித்து, மெயின் சப்ளையரையே வியக்க வைக்கும் காட்சிகள் பிரமாதப்படுத்துகிறது. நெட்பிளிக்ஸில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், க்ரிசெல்டா மற்ற புனைவு கதை போன்ற வெப் தொடர் இல்லை என்பது கூடுதல் தகவல். உண்மையாக 70களில் நடந்த சம்பவத்தையும் அதில் க்ரிசெல்டா என்ற போதை கடத்தல் ராணி குறித்த பயோபிக்காக க்ரிசெல்டா வெப் தொடர் வெளியாகிருக்கிறது.
சோபியா வெர்கரா: இந்த கதையின் அழுத்தத்தையும், க்ரிசெல்டாவே நேரில் வந்தால் கூட பயம் தெரியாது என்ற அளவிற்கு அசுரத்தனமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார் சோபியா வெர்கரா. 6 எபிசோடுகளையும் இவர் ஒருவரே கதையின் நாயகியாக தூக்கி நிறுத்தியிருக்கிறார். ஆனால், 1970 முதல் 2000 வரை நடக்கும் இந்த கதையில், கடத்தல் ராணியாகவும், அமெரிக்க போலீசுக்கு குடைச்சல் தந்துள்ள ஒரு பெண் கட்டி காத்த சாம்ராஜ்யத்தை துல்லியமாக 6 எபிசோடுகளோடு முடித்திருப்பது சிறு வருத்தம் தான். க்ரிசெல்டா செய்யாத தவறுகள் இல்லை, தான் நினைத்ததை அடைய எந்த அளவிற்கும் செல்வார் என்பதை பாரக்கும்போது உடல் நடுங்கத்தான் செய்கிறது. ஒரு பெண் செய்யும் தந்திரமும், அதற்கு பின்னால் எதிரிகளை வீழ்த்தும் சூழ்ச்சியும் அற்புதம்.

20 ஆண்டுகள் சிறை: புளோரிடாவில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் க்ரிசெல்டா சிறைக்கு செல்கிறார். தந்தை மகனை கொல்வதற்கு பதிலாக ஒரு குழந்தையை துடிதுடிக்க துப்பாக்கியால் தவறுதலாக சுட்டு கொல்கிறார். இதன்பிறகு 20 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என கடந்து போகிறது. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பது போலத்தான் க்ரிசெல்டாவின் வாழ்வின் துயரம். அவன் பொருளை எடுத்து அவனையை கொலை செய்வது போன்று தான் க்ரிசெல்டாவின் கடைசி நிமிடங்கள் இருக்கிறது. கடத்தல் ராணியின் மரண நிமிடங்கள் ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவமாக இருக்கிறது. இந்த வெப்தொடரை மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார் Andrés Baiz. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்ததற்காக இவரை பாராட்டலாம்.


Click it and Unblock the Notifications











