Year Ender 2023: நெட்பிளிக்ஸில் அதிகம் பேர் பார்த்த ஷோ லிஸ்ட்.. ராணா நாயுடு, துணிவுக்கு எந்த இடம்?
சென்னை: நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுவரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி இருந்த நிலையில், முதன்முறையாக 18000 ஷோக்களின் ஒட்டுமொத்த டேட்டாவையும் ஒவ்வொரு ஷோவையும் எத்தனை மணி நேரங்கள் ரசிகர்கள் உலகம் முழுவதும் பார்த்தார்கள் என்பதை அறிவித்துள்ளது.
தியேட்டர்களை காலி செய்து ஓடிடி நிறுவனங்கள் இந்த கொரோனா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.

இந்தியாவிலும் பல ரசிகர்கள் அதிகளவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, ஜியோ டிவி, சோனி லைவ், ஆஹா என பல ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் வெப்சீரிஸ் மற்றும் படங்களை அதில் பார்த்து வருகின்றனர். உலகளவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்டு செம காஸ்ட்லியாக உள்ள நிலையில், அதில் எந்த எந்த ஷோவை எத்தனை மணி நேரங்கள் மக்கள் செலவிட்டு பார்த்துள்ளனர் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
முதலிடத்தில் எந்த ஷோ: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இதுவரை 18 ஆயிரம் படைப்புகள் வெப்சீரிஸ் மற்றும் படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் கலந்த பட்டியலை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இதில், 2023ம் ஆண்டின் முதல் 6 மாதம் வரை அதிகளவில் மக்கள் பார்த்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தி நைட் ஏஜென்ட் முதல் சீசன் அதிகபட்சமாக 812 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்ட வெப்சீரிஸாக முதலிடத்தில் உள்ளது.
ராணா நாயுடு முதல் ஆர்ஆர்ஆர் வரை: இந்த ஆண்டு வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸில் அதிகளவில் ஆபாச காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், உலகம் முழுவதும் அதுபோன்ற வெப்சிரீஸ்களை தான் மக்கள் அதிகளவில் பார்த்து வருகின்றனர். ராணா நாயுடு 330வது இடத்தில் 46,300,000 மணி நேரங்கள் பார்க்கப்பட்டு இருக்கிறது. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 660வது இடத்தில் உள்ளது.
அஜித்தின் துணிவு: எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் உலகளவில் 1976வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டு திரைப்படங்களில் துணிவு தான் அதிக மணி நேரங்கள் பார்க்கப்பட்ட படமாக உள்ளது. அதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி படம் 3022வது இடத்தையும் பிடித்துள்ளன. அடுத்த ஆறு மாத ரிப்போர்ட் வெளியானால், ஜவான் மற்றும் லியோ இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications