ஒன்லி ஃபார் அடல்ட்ஸ்.. நெட்பிளிக்ஸின் டாப் 5 லேட்டஸ்ட் ஹாட் வெப்சீரிஸ்.. எல்லாமே எக்ஸ்ட்ரா தான்!

சென்னை: சர்வதேச ஓடிடி ஜெயன்ட் ஆன நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏகப்பட்ட ஹாட் வெப்சீரிஸ்களை இளைஞர்களை டார்கெட் செய்து அடிக்கடி வெளியிட்டு வருகிறது. சில வெப்சீரிஸ்கள் தமிழ் டப்பிங் உடனே எல்லைமீறிய கவர்ச்சியை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்து வருகின்றன.

ஓடிடியில் சென்சார் இல்லை என்பதால் பலரும் நிர்வாணக் காட்சிகளையும், போல்டான படுக்கையறை காட்சிகளையும் இஷ்டத்துக்கு வைத்து வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் அப்படி சர்வதேச ரசிகர்களை சமீப காலமாக மிகவும் கவர்ந்து வரும் சில போல்டான செம ஹாட்டான வெப்சீரிஸ்களில் டாப் 5 வெப்சீரிஸ்கள் பற்றி இங்கே பார்ப்போம் வாங்க..

5. பிரிட்ஜர்டன் வெப்சீரிஸ்

5. பிரிட்ஜர்டன் வெப்சீரிஸ்

உலகளவில் 82 மில்லியன் பேர் இந்த ஹாட்டான நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸை இதுவரை பார்த்துள்ளனர். அதில், நீங்களும் ஒருவராக இருக்கலாம். இல்லையென்றால், அந்த லிஸ்ட்டில் சீக்கிரம் இணைந்து விடுங்கள். பிரிட்ஜர்டன் குடும்பத்தில் உள்ள வாரிகள் தங்களுக்கான காதல் துணையை எப்படி தேர்வு செய்கின்றனர் என்கிற பீரியட் கதை தான் இந்த வெப்சீரிஸ். அடிக்கடி இதில், வரும் எரோடிக்கா சீன்ஸ் உங்களை நிச்சயம் இந்த வெப்சீரிஸுக்கு அடிமையாக்குவது நிச்சயம்.

4. செக்ஸ்/லைஃப்

4. செக்ஸ்/லைஃப்

நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த செக்ஸ்/லைஃப் வெப்சீரிஸ் டைட்டிலில் உள்ளதை போலவே செம செக்ஸியான வெப்சீரிஸ் தான். சாரா சாஹி, மைக் வாகல் மற்றும் ஆடம் டெமோஸ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸில் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து ரசிகர்களை உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்து விடுகிறது.

3. செக்ஸ் எஜுகேஷன்

3. செக்ஸ் எஜுகேஷன்

நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்கள் உலகளவில் பார்த்து மகிழும் முக்கியமான காமெடி/டிராமா வெப்சீரிஸ் தான் இந்த செக்ஸ் எஜுகேஷன். பாலியல் பற்றிய பாடத்தையும் அதில் உள்ள சிக்கல்களையும் ஃபன்னாகவும் அதே சமயம் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக எரோடிகாவும் எடுத்துக் காட்டும் இந்த வெப்சீரிஸின் ஒவ்வொரு சீசனுக்கும் பல பிரபலங்களே ஆவலோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2. விர்ஜின் ரிவர்

2. விர்ஜின் ரிவர்

மார்டின் ஹெண்டர்ஸன், அலெக்சாண்ட்ரா பிரெக்கன்ரிட்ஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் 4 சீசன்களை கடந்து அடுத்ததாக ரசிகர்கள் 5வது சீசனுக்காக வெயிட்டிங்கிலேயே வெறியேறி வரும் ஒரு அட்டகாசமான எரோடிக்கா வெப்சீரிஸ் தான் விர்ஜின் ரிவர். இது வாலிப வயசு என்பது போல இந்த வெப்சீரிஸின் டைட்டில் வாலிப நதியாக வைக்கப்பட்டு உள்ள நிலையில், வெப்சீரிஸ் உள்ளேயும் ஏகப்பட்ட 18 பிளஸ் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

1. எலைட்

1. எலைட்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபலமான இந்த வெப்சீரிஸ் கடந்த 2018 முதல் ஒவ்வொரு சீசனாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் 6வது சீசன் வரவிருக்கிறது. மூன்று மிடில் கிளாஸ் மாணவர்களுக்கு செல்வாக்கு நிறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சீட் கிடைக்கும் நிலையில், அங்கே நடக்கும் வர்கப் போர் மற்றும் இளம் வயதில் பள்ளியில் மாணவர்கள் செய்யும் லீலைகளை புட்டு புட்டு வைத்து இருக்கிறது இந்த வெப்சீரிஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X