பெருமாள் பெயரை கெடுக்கிறாங்க.. 2 நடிகைகளுடன் அப்படியொரு போஸ்.. கியாரா அத்வானி படத்துக்கு எதிர்ப்பு!
மும்பை: பாலிவுட்டில் தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவுப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன.
பாய்காட் பாலிவுட் டிரெண்டிங் ஆரம்பித்து அமீர்கானின் லால் சிங் சத்தா படம் படு தோல்வி அடைய அதுதான் காரணம் என்று கூறினர். அதன் பின்னர் அமீர்கான் சினிமாவை விட்டே விலகப் போவதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், கியாரா அத்வானி நடித்துள்ள புதிய இந்தி படத்தின் டைட்டிலில் பெருமாள் பெயர் பயன்படுத்தப்பட்டு அதன் போஸ்டர் படு கவர்ச்சியாக இருப்பதை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாய்காட் பாலிவுட்
பாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து இந்து மதத்தினர் மனங்களை புண்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், இந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதமாகவே படங்களையும் விளம்பரங்களையும் எடுத்து வருவதாக பாய்காட் பாலிவுட் டிரெண்டிங் சூடு பிடித்தது. அமீர்கானின் பிகே, சமீபத்தில் வெளியான விளம்பரம், தாண்டவ் வெப்சீரிஸ், சீதா படத்தில் கரீனா கபூர் நடிக்கப்போவதாக தகவல் வெளியானதும் வெடித்த பிரச்சனை, பிரபாஸின் ஆதிபுருஷ் என பல படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கியாரா அத்வானி படம்
பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல், கியாரா அத்வானி மற்றும் புமி பெட்னேகர் நடிப்பில் உருவாகி உள்ள கோவிந்தா நாம் மேரா படத்தின் படு கிளாமரான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. கூடவே அந்த படத்தின் போஸ்டர்களை பார்த்து பாய்காட் கேங் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

பெருமாள் பெயருக்கு களங்கம்
கோவிந்தா நாம் மேரா என டைட்டில் வைக்கப்பட்டு ஹீரோ விக்கி கெளஷல் நடுவே படுத்திருக்க கியாரா அத்வானி மற்றும் புமி பெட்னேகர் கவர்ச்சி உடையில் படுத்துக் கொண்டிருக்கும் போஸ்டர் மற்றும் பாத்ரூமில் மூன்று பேரும் இருக்கும் போஸ்டர்கள் வெளியான நிலையில், பெருமாள் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். மற்ற மதக் கடவுள் பெயர்களை வைத்து இப்படியொரு போஸ்டர் வெளியாகுமா என விளாசி வருகின்றனர்.

கோவிந்தாவின் ஹாட்டி ஒய்ஃப்
கோவிந்தாவின் ஹாட்டி ஒய்ஃப் என புமி பெட்னேகர் சோபாவில் ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டியபடி உட்கார்ந்து இருக்கும் போஸ்டரையும் ரசிகர்கள் வச்சு விளாசி வருகின்றனர். இதனால் தான் பாலிவுட் திரையுலகம் உருப்படாமல் தென்னிந்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வருகின்றன என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஓடிடி ரிலீஸ்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் டிசம்பர் 16ம் தேதி இந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாகிறது. நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதித்து வருவதாக பாலிவுட் ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காமெடி படம்
இது முழுக்க முழுக்க காமெடி ரொமாண்டிக் படம் தான் என்றும் நாயகனின் பெயர் கோவிந்தா என்பதால் படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்து மதத்தினரின் மனங்களை புண்படுத்த நினைக்கவில்லை என்றும் படக்குழுவினர் விளக்கம் கொடுத்து வருகின்றனர். நாளை டிரைலர் வெளியான பிறகு என்னவெல்லாம் பிரச்சனைகள் கிளம்ப போகிறது என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











