சனி, ஞாயிற்றுகிழமையை கொண்டாட ஓடிடியில் வந்துள்ள புது வரவுகள்..உங்களுக்காக சில முக்கிய படங்களும்

சனிக்கிழமை இரவு, ஞாயிற்றுக்கிழமைகளை நல்ல படங்களுடன் ரசிக்க புது வரவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெப்சீரீஸ் விரும்பும் நபர்களுக்கு முழு நீள உருப்படியான வெப்சீரீஸ்களை பார்க்க.

இன்றிரவு வெளியாகும் விருமன் உள்ளிட்ட தமிழ்படங்கள் தவிர மற்ற மொழி படங்கள் என்னென்ன உள்ளது பார்ப்போம்.

ஓடிடி புது வரவு

ஓடிடி புது வரவு

ஒரு காலத்தில் விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு கிழமைகளில் மாலையில் சினிமா தியேட்டர் சென்று படம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஓடிடி தளங்கள் வந்தவுடன், ஸ்மார்ட் டிவியும் வந்தவுடன் ஹோம் தியேட்டர் வசதியுடன் எச்டி பிரிண்டில் வீட்டில் சோஃபாவில் படுத்துக்கொண்டு, தரையில் உருண்டுக்கொண்டு விருப்பப்பட்ட படத்தை பார்க்கிறோம். ஒவ்வொரு வாரமும் இதற்காகவே புதுப்புது படங்கள் வெளியாகிறது. இன்றும் நாளையும் நாம் பார்க்க வசதியாக வெளியான மென்மையான காதல் படம், நகைச்சுவை, கிரைம் படங்கள் கீழே.

அபர்ணா பாலமுரளியின் சுந்தரி கார்டன்ஸ்

அபர்ணா பாலமுரளியின் சுந்தரி கார்டன்ஸ்

சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருதுப்பெற்ற அபர்ணா பாலமுரளி, நீரஜ் மாதவ் உள்ளிட்டவர்கள் நடித்த காதல் படம் சுந்தரி கார்டன்ஸ். மலையாளப்படமாக இருந்தாலும் தமிழில் அழகாக டப் செய்துள்ளனர். பாடல் உட்பட அழகாக அதன் இயல்பு குறையாமல் கொடுத்துள்ளனர். இது ஒரு முக்கோண காதல் படம். அமைதியான சூழலில் அழகாக பார்த்து ரசிக்கலாம். ஓடிடி தளத்தில் சோனி லைவ்-ல் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடித்த சீதா ராமம்

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடித்த சீதா ராமம்

இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான சீதா ராமம் திரைப்படம் . துல்கர் சல்மான் மிரூணள் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதுவும் ஒரு அழகான காதல் கதை. செப்.9 ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் தமிழில் வெளியாகியுள்ளது.

கார்த்தியின் விருமன் இன்றிரவு ரிலீஸ்

கார்த்தியின் விருமன் இன்றிரவு ரிலீஸ்

கார்த்தி, அதீதி, பிரகாஷ் ராஜ், சூரி, பாரதிராஜா நடித்து முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விருமன் செப்.9 இரவு 12 மணிக்கு ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகிறது. தியேட்டரில் பார்க்காதவர்களும், பார்த்தவர்களும் நல்ல ஹோம் தியேட்டரில் கஞ்சா கண்ணாலே பாடலை ரசிக்கலாம்

பாப்பான்' -சுரேஷ் கோபி போலீஸ் அதிகாரியாக -கிரைம் த்ரில்லர் படம்

பாப்பான்' -சுரேஷ் கோபி போலீஸ் அதிகாரியாக -கிரைம் த்ரில்லர் படம்

சுரேஷ் கோபி, நீடா பிள்ளை, கோகுல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்கம் ஜோஷி. இவர் 1978 ஆம் ஆண்டு முதல் இயக்குநராக இருக்கிறார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜை வைத்து இவர் இயக்கிய பொரிஞ்சு மரியன் ஜோஸ் பெரிதாக பேசப்பட்டது. இந்தப்படம் ஓடிடியில் ஜீ -5 -ல் வெளியாகியுள்ளது.

ஆங்கிலப்பட பிரியர்களுக்காக தோர்: லவ் அன்ட் தண்டர்

ஆங்கிலப்பட பிரியர்களுக்காக தோர்: லவ் அன்ட் தண்டர்

ஆங்கிலப்படத்தை பார்க்க விரும்பும் நபர்களுக்காக வந்துள்ள புது வரவு தோர் வரிசையில் நேற்று வெளியாகியுள்ள தோர்: லவ் அன்ட் தண்டர். ஓடிடி தளத்தில் ஹாட்ஸ்டாரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

டோவினோ தாமஸின் தல்லு மாலா

டோவினோ தாமஸின் தல்லு மாலா

நடிகர் டோவினோ தாமஸ் வளர்ந்து வரும் நடிகர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர். இவர் நடித்த ஆக்‌ஷன் காமெடி படம் தல்லு மாலா ஓடிடி தளம் நெட் ஃபிலிக்ஸின் செப்.9 இரவு 12 மணிக்கு வெளியாகிறது.

ஏக் வில்லன் ரிடர்ன்ஸ்

ஏக் வில்லன் ரிடர்ன்ஸ்

இந்தியின் ஏற்கெனவே 2014 ஆண்டு வெளியான ஏக் வில்லன் படத்தின் அடுத்த பாகமாக ஏக் வில்லன் ரிடர்ன்ஸ் வெளியாகியுள்ளது. இது கிரைம் திரில்லர் படம் ஜான் ஆப்ரகாம், அர்ஜுன் கபூர், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெட்ஃபிலிக்ஸில் தற்போது பார்க்கலாம். இந்தி படம், ஆங்கில டைட்டிலில் உள்ளது. கிரைம் கதைகளை விரும்பும் நபர்களுக்கு நல்ல விருந்து.

நா தான் கேசு கொடு

நா தான் கேசு கொடு

காமெடி பட பிரியர்களுக்காக வந்துள்ள படம் நா தான் கேசு கொடு. ஒரு சாதாரண குடிமகன் கேஸ் போட்டு அமைச்சரை கோர்ட்டுக்கு இழுக்கும் காட்சி கோர்ட் காட்சிகள் ரசிக்கும்படி நகைச்சுவையாக உள்ளன. குஞ்சாக்கோ போபன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

கார்கி, ஹெவன், இன்னளே வரே

கார்கி, ஹெவன், இன்னளே வரே

இது தவிர போனவாரம் வெளியான கார்கி , ஹெவன், இன்னளே வரே படங்களையும் நீங்கள் பார்க்காவிட்டால் அவசியம் பார்க்கவும். கார்க்கி படம் சாய்பல்லவி நடித்து திரையரங்கில் ஓடிய படம். ஓடிடி தளத்தில் சோனி லை-ல் உள்ளது. ஹெவன் மலையாளத்தில் பேசப்பட்ட ஒரு கிரைம் திரில்லர் படம். சூரஜ் வெஞ்சர் மூடு, அலென்சியர் லே லோபஸ், சுதேவ் நாயர்,நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் உள்ளது. அடுத்து கிரைம் திரில்லர் படம் இன்னளே வரே. ஒரு இளம் நடிகரை கடத்தி பணம் பறிக்கும் பெண்ணாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இளம் நடிகராக ஆசிப் அலி நடித்துள்ளார். இந்தப்படமும் சோனி லைவ்-ல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X