OTT release this week: ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன?

சென்னை: 2023ம் ஆண்டு முடியவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால், புதிய ஆண்டை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஆண்டு பிறப்பை மகிழ்ச்சியோடு வரவேற்க ஏதுவாக அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளங்கள் புது புது படங்களை ஒளிபரப்ப உள்ளன.

அந்த வகையில் தியேட்டரில் சக்கைப்போடு போட்ட சல்மான் கான் நடித்த டைகர் 3, நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி மற்றும் திகிலூட்டும் மங்களவாரம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தயாராக உள்ளன.

New movie releases this week from dec 26 to dec 31 2023 on ott platform

அன்னபூரணி: ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாக அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ந் தேதி தியேட்டரில் வெளியானது. ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், , ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மங்களவாரம்: இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி உள்ள மங்களவாரம் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற தலைப்புடன் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது.அஜ்மல், நந்திதா ஸ்வேதா, பாயல் ராஜ்புத், சைதன்யா, ரவீந்திரா விஜய்,சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா என பலர் நடித்துள்ளனர். திகிலூட்டும் ஹாரர் படமாக உருவாகி உள்ள இப்படத்தை இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் பார்த்து மகிழலாம்.

Tiger 3(இந்தி): சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் டைகர் 3. 'ஏக் தா டைகர்', 'டைகர்' படத்தின் தொடர்ச்சியாக வெளியான இப்படத்தில் ரேவதி, அசுதோஷ் ராணா, ரன்வீர் ஷோரே, ரித்தி டோக்ரா மற்றும் விஷால் ஜெத்வா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Kho Gaye Hum Kahan (இந்தி): 'கோ கயே ஹம் கஹான்' 20 வயதிற்கு இடைப்பட்ட மூன்று நண்பர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கையை வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அனன்யா நடிக்கிறார் பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி மற்றும் ஆதர்ஷ் கவுரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 26ந் தேதியான இன்று முதல் பார்க்கலாம்.

12th Fail: விது வினோத் சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தான் 12th Fail, இந்த படத்தில் மேதா ஷங்கருடன் விக்ராந்த் மாஸ்ஸி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியாக பலரின் பாராட்டை பெற்ற இப்படம் டிசம்பர் 29ந் தேதி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

A Very Good Girl: இயக்குநர் பீட்டர்சன் வர்காஸ் இயக்கத்தில் கேத்ரின் பெர்னார்டோ, டோலி டி லியோன், கயோரி ஓனுமா, ஜேக் எஜெர்சிட்டோ, ஏஞ்சல் அக்வினோ ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் A Very Good Girl. பயங்கரமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை இப்படம் அப்பட்டமாக காட்டுகிறது. க்ரைம் திரில்லர் விரும்பிகள் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 27ந் தேதி முதல் பார்க்கலாம்.

Keedaa Cola: இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்டபம் Keedaa Cola. ஏழ்மையான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இரண்டு நண்பர்கள வாழ்க்கையில் எப்படியாவது பெரிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காக குளிர்பான பாட்டிலில் கரப்பான் பூச்சியை போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தில் சைதன்யா ராவ் மடாடி, ராக் மயூர், பிரம்மானந்தம், தருண் பாஸ்கர், ஜீவன் குமார், விஷ்ணு ஓய், ரவீந்திர விஜய், ரகு ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 28 டிசம்பர் ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X