இந்த வார ஓடிடி ரிலீஸ்.. சுமோ முதல் அபிலாஷம் வரை.. ஓடிடியில் பார்க்க வேண்டிய படங்கள்!
சென்னை: முன்பெல்லாம் புது படத்தை பார்க்க வேண்டும் என்றால், சினிமா பிரியர்கள் வெள்ளிக்கிழமைக்காக காத்து இருப்பார்கள். ஆனால், இன்று நிலைமையே வேறுவிதமாக மாறிவிட்டது. ஒரு படம் வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்டால், ஓடிடியில் அந்த படம் வெளியாகி விடுகிறது. இதனால், ஓடிடியில் படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை கவருவதற்காக ஒவ்வொரவாரமும் ஓடிடி தளத்தில் புது புதுப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வார இறுதி நாட்களில், என்னென்ன படத்தை பார்க்கலாம் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்'
சுமோ: மிர்ச்சி சிவா நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் தியேட்டரில் வெளியான திரைப்படம். இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கிய இப்படத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சுமோ வீரர் Yoshinori Tashiro இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று முதல் SunNXT and Tentkotta ஆகிய ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் , எடிட்டர் பிரவீன் கே.எல் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வல்லமை: ஏப்ரல் 25ந் தேதி தியேட்டரில் வெளியான படம் வல்லமை. கருப்பையா முருகன் இயக்கிய இந்த படத்தில், பிரேம்ஜி அமரன் ஒரு பாசம் உள்ள தந்தையாக நடித்திருந்தார். திவதர்ஷினி, தீபா ஷங்கர், வழக்கு என் முத்துராமன், சிஆர் ரஜித், சூப்பர்குட் சுப்ரமணி, சுப்ரமணியன் மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் Tentkotta மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
ஹார்ட் பீட் சீசன் 2: ஹார்ட் பீட் முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் உருவானது. இதில் தீபா பாலு, அனுமோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ரீனா மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரை நேற்று முதல் ஜியோஹார்ட் ஸ்டாரில் பார்க்கலாம்.
ஹண்ட்: பாவனா நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் 'ஹண்ட்'. மருத்துவரான பாவனா கொலை வழக்கை விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. இப்படம் நாளை 23ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஷாஜி கைலாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகை பாவனாவுடன், ரெஞ்சி பணிக்கர், சந்துநாத், அனு மோகன், டெயின் டேவிஸ், அதிதி ரவி, ஜி சுரேஷ் குமார், அஜ்மல் அமீர், ராகுல் மாதவ், நந்து மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கைலாஸ் மேனன் இசையமைக்க, ஜாக்சன் ஜான்சன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications











