Nivetha Pethuraj: நிவேதா பெத்துராஜ் போட்ட போலீஸ் டிராமா?.. அந்த வெப்சீரிஸின் தமிழ் டிரெய்லர் இதோ!
சென்னை: நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பருவு வெப்சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் ஜூன் 14ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆணவ கொலையை மையமாக கொண்ட கதையில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை வழிமறித்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது போலவும் தனது கார் டிக்கியை திறக்க முடியாது என்றும் அவர் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அப்போதே ரசிகர்கள் இது படத்துக்கான புரமோஷன் என கழுவி ஊற்ற ஆரம்பித்தனர்.

ஜீ5 ஓடிடி தளத்தில் உருவாகி உள்ள பருவு வெப்சீரிஸுக்கான புரமோஷன் தான் அது என்பதை சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் ரிவீல் செய்தார். இந்நிலையில், அதன் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
போலீஸ் டிராமா: சினிமா பிரபலங்கள் தங்கள் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை புரமோட் செய்ய போலீஸ் டிராமா நடத்தி வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி படத்தின் புரமோஷனுக்கும் இதே யுக்தியை கையாண்டது குறிப்பிடத்தக்கது. நடிகை பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாகவே ஃபேக் டிராமா போட்டு வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நிவேதா பெத்துராஜின் ஃபேக் போலீஸ் டிராமா அந்த வீடியோவில் போலீஸார் அணிந்திருந்த செருப்பையும் நிவேதாவின் ஓவர் ஆக்டிங்கையும் பார்த்தே ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர்.
பருவு வெப்சீரிஸ்: ஜீ5 ஓடிடி தளத்தில் ஏகப்பட்ட தரமான வெப்சீரிஸ்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பருவு வெப்சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபட்டி ராஜசேகர் இருவரும் இணைந்து இதை இயக்கி உள்ளனர். நாகபாபு, நரேஷ் அகஸ்தியா மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
ஆணவக் கொலை: இந்த வெப்சீரிஸ் சாதிய பிரச்சனை மற்றும் ஆணவக் கொலையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. ஓடிடிக்கு வந்துள்ள நிவேதா பெத்துராஜுக்கு இந்த வெப்சீரிஸ் வெற்றியை கொடுக்குமா என்பது ஜூன் 14ம் தேதி தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications