17 ஆயிரம் கோடி வசூலை அவதார் 3 நெருங்க வாய்ப்பே இல்லை.. ஓடிடி ரிலீஸ் எப்போ?.. ஏமாற்றினாரா கேமரூன்?
சென்னை: அவதார் முதல் பாகம் உலகளவில் சுமார் 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி) அளவுக்கு வசூல் ஈட்டி அதற்கு முன்னதாக டைட்டானிக் படம் செய்த சாதனையை முறியடித்து நம்பர் ஒன் இடத்துக்குச் சென்றது.
அவதார் படத்தின் வசூலை முறியடிக்க அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படமே ரீ ரிலீஸ் செய்து தான் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் 2ம் பாகம் 2 பில்லியன் டாலர் (17 ஆயிரம் கோடி) வசூலை ஈட்டி அசாதாரண வெற்றியை கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஈட்டியது.

அவதார் 3 படத்தை பார்த்த பிறகும் உலகளவில் விமர்சகர்கள் இந்த படம் அவதார் 1 மற்றும் 2 போலவே உள்ளது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவதார் 2ம் பாகத்தின் ஓபனிங் அளவுக்கு அவதார் 3 படத்தின் ஓபனிங் உலகளவில் இல்லாத நிலையில், இந்த படம் 2 பில்லியன் டாலர் வசூலை ஈட்டுவது ரொம்பவே கடினம் தான் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.மேலும், அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களையும் இங்கே காணலாம்.
385 கோடி வசூல்: ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கியுள்ள அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 40 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியதாக 'டெட்லைன்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்தின் பட்ஜெட் அதிகபட்சமாக 300 மில்லியன் டாலர் இருக்கும் என்கின்றனர். 40 மில்லியன் டாலர் வசூல் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 385 கோடி வசூலை முதல் நாளிலேயே அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் நல்ல வசூல்: இந்தியாவிலேயே முதல் நாளில் 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது அவதார் 3ம் பாகமான ஃபயர் அண்ட் ஆஷ். 300 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலருக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் வெற்றிப் பெற்றால், ஜேம்ஸ் கேமரூன் அவதார் 4ம் பாகத்தை 2029ம் ஆண்டும் கடைசி பாகமான அவதார் 5ம் பாகத்தை 2031ம் ஆண்டும் வெளியிடுவார் எனக் கூறியுள்ளார். ஒருவேளை படம் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போய் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தால் அடுத்த பாகம் வராது என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
2 பில்லியன் வசூல் சாத்தியமில்லை: அவதார் முதல் பாகம் 2.95 பில்லியன் வரை வசூல் செய்தது. சுமார் 25 ஆயிரம் கோடி வசூலை உலகளவில் ஈட்டியது. அவதார் 2ம் பாகம் 2 பில்லியன் வரை வசூல் ஈட்டியது. ஆனால், அவதார் 3ம் பாகம் 2 பில்லியன் வசூலை நெருங்க வாய்ப்பே இல்லை என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே ஓடிடி ரசிகர்கள் அதிகரித்தது தான் காரணம் என்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் சீனாவின் அனிமேஷன் படமான Ne Zha 2 திரைப்படம் அதிகபட்சமாக 1.902 பில்லியன் டாலர் வசூலை உலகளவில் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் டிஸ்னியின் ஜூடோபியா 2 திரைப்படம் 1.145 பில்லியன் வசூலை ஈட்டியுள்ளது. 3வது இடத்தில் லிலோ அண்ட் ஸ்டிட்ச் திரைப்படம் 1.038 பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. அவதார் 3ம் பாகம் இந்த படங்களின் வசூலையே முறியடிப்பது சிரமம் தான் என்கின்றனர்.
ஓடிடி ரிலீஸ் எப்போ?: நெட்பிளிக்ஸுக்கு எதிராகவே தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக குறைத்து விட்டது. சுமார் 3 மாத காலம் திரையரங்குகளில் மட்டுமே அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைபடம் ஓடும் என்றும் அதன் தியேட்டர் ரன்னிங் முடிந்த பின்னர் தான் ஓடிடியில் படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி இருக்கும் அவதார் 3ம் பாகத்தை திரையரங்கில் பார்த்து மகிழவே ரசிகர்கள் விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











