This Week OTT: மெய்யழகன் முதல் கடைசி உலகப்போர் வரை.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! டோன்ட் மிஸ்!
சென்னை: மக்கள் குறைந்த செலவில் வகை வகையான படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைப்பது ஓ.டி.டி தளங்கள்தான். இன்றைய ஓ.டி.டி தளங்களால் தியேட்டருக்கு வருமானம் குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், ஓ.டி.டி தளங்கள் ரசிகர்களின் பணம்-நேர விரையத்தை, அலைச்சலை தடுத்துள்ளது. தியேட்டரில் சென்று படம் பார்க்கும் அனுபவத்தை ஓ.டி.டி தளங்கள் தராது என்ற பேச்சும் இருந்தாலும், ஓ.டி.டி தளங்களுக்கான வரவேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. குறிப்பாக வாரவாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளதோ அதே அளவுக்கு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கும் உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
மெய்யழகன்: நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன மெய்யழகன் படம் தியேட்டரில் கொண்டாடப்பட்ட படம். கார்த்தியும் அரவிந்த் சாமியும் தங்களது அட்டகாசமான நடிப்பினால், படத்தினை வேறு தளத்திற்கே கொண்டு சென்றுள்ளனர் எனலாம். பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம். இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். படம் பார்த்த அனைவரும் படத்தினைப் பாராட்டினர். இப்படம் நாளை அதாவது அக்டோபர் 25ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

கடைசி உலகப்போர்: ஹிப் ஹாப் ஆதி, நாசர், நட்ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் கடைசி உலகப்போர். இப்படம் வெளியாகி வணிக ரீதியாக ஓரளவுக்கு வெற்றி பெற்றது. குறிப்பாக நட்டியின் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது. மூன்றாம் உலகப்போர் வந்தால் என்ன நடக்கும் எதற்காக நடக்கும் என்பது குறித்து இந்தப் படம் பேசியது. இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.
ஹிட்லர்: விஜய் ஆண்டனி இப்போதெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு படம் ரிலீஸ் செய்து விடுகின்றார். இதனால் ஆண்டுக்கு ஐந்து படங்களாவது ரிலீஸ் செய்து விடுகின்றார். அந்த வகையில் கடந்த மாதம் அவரது நடிப்பில் ரிலீஸ் ஆன ஹிட்லர் படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றது. இப்படம் அரசியல் கதை சார்ந்து எடுக்கப்பட்ட படம். இப்படம் மொத்தம் மூன்று ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. பிரைம் வீடியோ, சிம்ப்ளி சவுத் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

கிளாஸ் மேட்ஸ்: மதுவினால் அடிமையானவர்களுக்கு அல்லது மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக 'கிளாஸ் மேட்ஸ்' என்ற படம் சமீபத்தில் வெளியானது. கிளாஸ் மேட்ஸ் படத்தை ஷரவணசக்தி இயக்கியது மட்டும் இல்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இப்படத்தை தியேட்டரில் பார்த்த பலரும் படத்தைப் பாரட்டினார்கள். கிளாஸ் மேட்ஸ் படம் சிம்ப்ளி சவுத் ஓ.டிடி தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
டோ பட்டி : நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ஒரு பாலிவுட் படம் டே பட்டி. இந்தப் படத்தில் கஜோல் மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ளனர். இப்படத்தினை ஷஷாங்கா சதுர்வேதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கனிகா தில்லான் எழுதியுள்ளார். இப்படம் திரல்லர் சஸ்பென்ஸை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
டோன்ட் மூவ் : நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ஹாலிவுட் படம் டோன்ட் மூவ். படத்தை ஆடம் ஷிண்ட்லர் மற்றும் பிரையன் நெட்டோ ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். கெல்சி அஸ்பில், டேனியல் பிரான்சிஸ் , பின் விட்ராக் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஐந்தாம் வேதம்: 90களின் பிரபலமான 'மர்மதேசம்' தொடரின் இயக்குநர் நாகா, 'ஐந்தாம் வேதம்' வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரீஸ் புராணங்களை அடிப்படையாக கொண்ட திரில்லராக உருவாகி உள்ளது என அதில் நடித்த சாய் தன்ஷிகா அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.இந்த தொடர் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.



Click it and Unblock the Notifications











