Oscars 2026 Sinners: டைட்டானிக் சாதனையை நாமினேஷனில் முறியடித்த சின்னர்ஸ்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
லாஸ் ஏஞ்சல்: 98வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 15ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டாவது ஆஸ்கர் விழாவில் இந்திய படம் பங்கேற்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ஹோம்பவுண்ட் திரைப்படம் பவுன்ஸ் ஆகி திரும்பி விட்டது. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல பிரிவுகளில் நாமினேட் ஆகி விருதுகளையும் அள்ளியது. அடுத்த ஆண்டு வாரணாசி ரிலீஸ் ஆகி ஆஸ்கருக்கு போனால் தான் உண்டு என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை அதிக ஆஸ்கர் பரிந்துரைகளை பெற்ற சாதனையை ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லா லா லாண்ட் உள்ளிட்ட படங்கள் பெற்றிருந்தன. இந்த முறை அதனை முறியடித்து சின்னர்ஸ் திரைப்படம் அதிகப்படியான பிரிவுகளில் ஆஸ்கர் போட்டியில் முன்னேறி நிற்கிறது.

பொதுவாக ஆஸ்கர் நாமினேட் ஆன படங்களை உலகம் முழுவதும் பார்க்க ஆசைப்படுவார்கள். ஆனால், பல படங்கள் இன்னமும் ஓடிடியில் வெளியாகி இருக்காது. இந்தமுறை இந்திய ரசிகர்களுக்கு அந்த குறையையும் சின்னர்ஸ் வைக்கவில்லை.
16 பிரிவுகளில் கெத்துக்காட்டிய சின்னர்ஸ்: இதுவரை ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லா லா லாண்ட் உள்ளிட்ட படங்கள் அதிகபட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், அந்த சாதனையை 16 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு சின்னர்ஸ் திரைப்படம் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை என ஒட்டுமொத்தமாக 16 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், அதிக ஆஸ்கர்களையும் இந்த படம் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெக்கார்டை முறியடிக்க அடுத்து வரும் படங்களுக்கு பல காலங்கள் கூட ஆகலாம்.
சின்னர்ஸ் படம் பற்றிய தகவல்கள்: ரியான் கூக்ளர் இயக்கத்தில் மைக்கேல் பி. ஜோர்டன் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 17, 2025ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தெறிக்கவிட்ட படம் தான் சின்னர்ஸ். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஹாரர் ஆக்ஷன் டிராமா படமாக இந்த படம் வெளியானது. 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் மைக்கேல் பி. ஜோர்டன் உடன் இணைந்து ஹெயிலி ஸ்டான்ஃபீல்ட், மைல்ஸ் கேட்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?: இந்திய ரசிகர்கள் சின்னர்ஸ் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டாரை சப்ஸ்கிரைப் செய்திருந்தாலே இந்த படத்தை இலவசமாக கூடுதல் கட்டணம் எல்லாம் எதுவுமின்றி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











