எவ்வளவு தொகை என்றாலும் ஓகேதான்.. கூலி ஓடிடி ரைட்ஸை வாங்க போட்டிப்போடும் நிறுவனங்கள்?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் படமும், லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படமும் சரியாக போகாததால் இந்தப் படத்தை இரண்டு பேருமே முக்கியமானதாக கருதுகிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக சென்னையில் இப்போது நடந்துவருகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக இணைந்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கமலை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை லோகி கொடுத்ததைத் தொடர்ந்து அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இப்போதை டாப் இயக்குநர் என்றால் அவர்தான். அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்றுதான் பல நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கூலி மீது நம்பிக்கை: ஆனால் கடைசியாக விஜய்யை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் சரியாக போகவில்லை. குறிப்பாக படத்தின் ப்ளாஷ் பேக் காட்சி குறித்து லோகேஷ் கொடுத்த பேட்டி ஒன்றை வைத்துக்கொண்டு அவரையும், படத்தையும் நெட்டிசன்கள் அடித்து துவைத்துவிட்டனர். இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோதான் படு மோசமான விமர்சனத்தை சந்தித்தது. அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்பதும் ஒருவகையில் உண்மைதான் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே கூலியை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இயக்குநருக்கு இருக்கிறது.
நட்சத்திர பட்டாளம்: கூலி படத்தில் ரஜினியுடன் அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முதலில் அமீர் கான் ஏற்றிருந்த கேரக்டரில் நடிக்க ஷாருக்கானிடம்தான் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். முதன்முறையாக அமீர் கான் தமிழ் படத்தில் நடிப்பதால் எப்படிப்பட்ட ரோலினை லோகி அவருக்கு கொடுத்திருப்பார்; ரஜினியும் அவரும் தோன்றும் காட்சிகள் எவ்வளவு மாஸாக இருக்கும் போன்ற எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன.
பட்டையை கிளப்பிய டைட்டில் டீசர்: படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் டைட்டில் டீசர் கடந்த வருடம் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதிலிருந்தே படத்துக்கு எக்கச்சக்க ஹைப் ஏறியிருக்கிறது. வழக்கம்போல் அனிருத்தான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த ஷெட்யூல்தான் இறுதி ஷெட்யூல் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது இந்தப் படம் கண்டிப்பாக இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் ரஜினி, லோகேஷ் என இரண்டு பேருமே இந்திய திரைத்துறையில் பிரபலமானவர்கள். எனவே இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்க பல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றனவாம். அவற்றில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எவ்வளவு தொகை கேட்டாலும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டு வாங்கிவிட அந்நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











