Dare To Watch 1: ஓடிடியில் இந்த படத்தை பார்க்க தனி தில்லு வேணும்.. கொ*லை இல்ல பாஸ் இது கலை!

சென்னை: சினிமாக்கள் என்னதான் பல வகையான சினிமாக்கள் வந்தாலும், சீரியல் கில்லர் சினிமாக்களுக்கு என்றுமே தனி வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் அவை நேரடியாகவே மக்களை பாதித்துள்ளது என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் ரசிகர்கள், சீரியல் கில்லர்களால் கொ*லை செய்யப்படும் மக்கள்களில் ஒருவராகவே தங்களை நினைத்துக் கொள்வதாலோ என்னவோ, இந்த வகை படங்கள் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுவது இல்லை. ஆனாலும் ரசிகர்கள் பலரும் இது போன்ற படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.

அப்படி தேடித் தேடிப் பார்க்கும் ரசிகர்கள், இந்த வகை படங்களை ஏதோ பொழுது போக்கிறாக மட்டும் பார்க்காமல், படங்களை டீ கோட் செய்வதை எல்லாம் பார்க்க முடியும். சில நேரங்களில் அந்த சீரியல் கில்லரின் பக்கமும் நியாயம் இருக்கிறது என்று சிலர் கூறும் போது, ஆத்தாடி இவ்வளவு நேரம் ஒரு கொ*லைகாரன் கூடவா சகவாசம் வைத்துக் கொண்டு இருந்தோம் என்ற எண்ணம் நமக்கே கூட வரும். இப்படியான படங்களை தேடித் தேடி பார்க்கும் ரசிகர்களே சவால் விடும் அளவுக்கு ஒரு படத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அப்படியான ஒரு படம் குறித்து பார்க்கலாம்.

OTT Dare To Watch Inside the Mind of a Killer The House That Jack Built Explained

The House That Jack Built என்பது டேனிஷ் இயக்குநர் Lars von Trier என்பவர் இயக்கிய சர்ச்சைக்குரிய சைகலாஜிக்கல் கிரைம் படம் தான் இது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தற்போது, அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது. இந்த படத்தின் கதையை பொறுத்தவரையில் கதாநாயகனான சீரியல் கில்லர் தான் செய்யும் கொ*லைகளை கலை என்று கூறுவது தான், பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கலை: கொ*லையை கலை என்று நினைப்பதாலேயே தன்னை ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று நினைத்துக் கொள்கிறான் கதாநாயகன். தான் செய்த கொ*லைகளை எல்லாம் அது கொ*லை இல்லை பாஸ் கலை.. இங்க பாருங்க இந்த ஆளை நான் இப்படி ரசிச்சு ரசிச்சு கொ*லை செய்தேன். இது மட்டுமா, அவனுடைய உடல் பாகங்களை வெ*ட்டும் போது, இப்படி ரசிச்சு ரசிச்சு வெ*ட்டினேன் என்று சொல்லுவதை படமாக்கிய விதம் எல்லாம் பகீர் கிளப்பும் காட்சிகள். இன்னும் சொல்லப்போனால், ஒரு சைக்கோ கொ*லைகாரன் இப்படி எல்லாம் யோசிப்பானா? அவனது மனநிலை இப்படித்தான் இருக்கிறதா என்று எல்லாம் கேள்விகளை இந்த படம் முன் வைக்கிறது. பெரும் அச்சத்தை உருவாக்குகிறது.

OTT Dare To Watch Inside the Mind of a Killer The House That Jack Built Explained

திகில் ஊட்டும் காரணம்: இத்தனை கொ*லைகளை செய்வது ஒரு கலை என்று கூறும் சீரியல் கில்லர், அதற்கு ஒரு காரணம் சொல்வதும், அதற்காக அவன் எத்தனை கொ*லைகளைச் செய்கிறான் என்பதுதான் மொத்த படமும் என்றாலும், படத்தின் திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என மொத்தமும் 100 சதவீதம் ஒரு சீரியல் கில்லர் படத்திற்கு பொருந்திப் போகும் அளவுக்கு பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர். இந்த படத்தை தனியாக பார்க்கவும் அதுவும் இரவில் பார்க்கவும் தனி தைரியம் வேண்டும். அப்படி உங்களுக்கோ உங்கள் நட்பு வட்டத்தில் யாருக்காவது இப்படியான படங்களைப் பார்க்க பிடிக்கும் என்றால் இந்த படத்தை தாராளமாக பரிந்துரை செய்யலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X