OTT: இந்த வார வீக்கெண்டில் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. உறைய வைக்கும் உண்மை சம்பவம் Bhakshak!

சென்னை: இயக்குநர் புல்கித் இயக்கத்தி பாலிவுட் நடிகை புமி பெட்னேகர் நடிப்பில் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது பக்‌ஷக் (Bhakshak). டைட்டிலை போலவே பார்த்தால் ரசிகர்களை பக்கென ஆக்கி விடும் அளவுக்கு உண்மை சம்பவத்தை தழுவி எடுத்திருக்கின்றனர்.

அப்போதெல்லாம் சன் டிவியில் 3 மாதங்களுக்குப் பிறகு தான் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என ஒரு பெரிய புதிய படம் வெளியாகும். ஆனால், சமீப காலமாக 4 வாரங்களில் புதிய படங்கள் வெளியாகும் நிலையில் தியேட்டருக்கு செல்லும் எண்ணமே அதிகப்படியான ரசிகர்கள் மத்தியில் போய் விடுகிறது.

OTT: Dont miss this real incident movie Bhakshak and other top new releases

பாப்கார்ன் கெட்ட கேட்டுக்கு: 10 ரூபாய்க்கு பாப்கார்ன் பாக்கெட் வாங்கி வீட்டில் 2 நிமிஷத்தில் செய்து சாப்பிட்டு விடலாம். ஆனால், தியேட்டரில் அன்லிமிடட் ஃபில்லிங் என்கிற பெயரில் பாப்கார்னை போய் 500 ரூபாய்க்கு விற்கின்றனர். 200 ரூபாய்க்கு டிக்கெட், பார்க்கிங் கட்டணம் பைக் என்றால் 50, கார் என்றால் 100 அதிலும் டைமிங் உள்ளது. ஒரு ஆள் படம் பார்க்கவே சுமார் 500 ரூபாய் குறைந்த பட்சம் ஆகிவிடுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் படத்துக்கு போனால், 2000 ரூபாய் செலவாகி விடும்.

நெட்பிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷனே கம்மி: மற்ற ஓடிடி நிறுவனங்கள் 1000 ரூபாய்க்கு வருஷத்துக்கு சந்தா தந்தால் உலகின் காஸ்ட்லியான நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாசத்துக்கு 200 ரூபாய்க்கு சப்ஸ்க்ரிப்ஷன் கொடுக்கின்றனர். இன்னும் சூட்டிங்கே முடியாத விடாமுயற்சி முதல் பல படங்களை இப்போதே அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளனர். சமீபத்தில் தியேட்டருக்கு வந்து ஓடாத மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தை இந்த வாரம் வெளியிட்டுள்ளனர். முன்னதாக சலார், அனிமல் படங்கள் நெட்பிளிக்ஸில் சக்கைப் போடு போட்டது.

டப்பிங் சொதப்பல்: குண்டூர் காரம் திரைப்படத்தை தெலுங்கில் பார்த்து இருந்தால் கூட ரசிகர்கள் ஓரளவுக்கு பார்த்து இருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு மொழியிலும் வெளியிடுகிறேன் என அந்த படத்தையே மேலும், மர்டர் செய்து விட்டனர். ஓடிடி பக்கம் ஒதுங்கினாலும் இந்த வாரம் உருப்படியாக ஒரு படம் கூட இல்லையா என ஏங்கும் ரசிகர்கள் இந்தியில் வெளியாகி உள்ள பக்‌ஷக் திரைப்படத்தை இந்த வாரம் ஓடிடியில் தாராளமாக பார்க்கலாம்.

OTT: Dont miss this real incident movie Bhakshak and other top new releases

பக்‌ஷக்: அடைக்கலம் ஒன்றில் இளம் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை லோக்கல் பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் தனது உயிரையும் பணயம் வைத்து கண்டுபிடித்து அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் கதையாக இந்த பக்‌ஷக் உருவாகி உள்ளது. பாலிவுட்டில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் புமி பெட்னேகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நன் 2: அப்படியே ஹாரர் விரும்பிகளுக்காக ஜியோ சினிமாவில் நன் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. நன் முதல் பாகமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை மிரட்டிய நிலையில், 2ம் பாகமும் திகிலூட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அயலான், கேப்டன் மில்லர்: அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்களை ஏற்கனவே ரசிகர்கள் நேற்று வெளியானதுமே பார்க்கத் தொடங்கி விட்டனர். பார்க்காதவர்கள் இந்த வார இறுதியை அந்த படங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X