துரந்தர் அன்கட் வெர்ஷன் பார்க்க ரெடியா?.. ஓடிடியில் எப்போ ரிலீஸ்.. துரந்தர் 2வும் ஆன் தி வே!

மும்பை: பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வரவேற்பு பெற்று, மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறிய 'துரந்தர்' திரைப்படம், தற்போது ரசிகர்களின் வீடுகளுக்குள் நுழையத் தயாராகிறது. ஏற்கனவே துரந்தர் படத்தின் ஓடிடி வெளியான நிலையில், அதன் அன்கட் வெர்ஷன் தற்போது வெளியாக காத்திருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள், வரும் மே 22 முதல் (வெள்ளிக்கிழமை) ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் 'துரந்தர்' உலகை காண ரெடியாகுங்கள். இதன் தனித்துவமான 'RAW மற்றும் Undekha' பதிப்பு, இதுவரை காணாத பிரத்யேக காட்சிகளுடன் (undekha moments) ஆழமான அனுபவத்தை உறுதிசெய்கிறது. இது அதிரடி, டிராமா, உணர்ச்சிகள் நிறைந்த தீவிர சினிமா அனுபவத்தை வழங்கும்.

OTT Fans Get Ready to Experience Dhurandhar RAW and Undekha on JioHotstar from May 22nd
Photo Credit:

ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் 'துரந்தர்', திரையரங்குகளைக் கடந்து நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுவதால், இந்தியாவின் மிகப்பெரிய சினிமா படைப்புகளில் ஒன்று முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரந்த மக்களைச் சென்றடைகிறது.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்க, B62 ஸ்டுடியோஸ் தயாரித்த 'துரந்தர்' படத்தை ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோர் தயாரிப்பாளர்கள். ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன், அக்‌ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ராகேஷ் பேடி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

துரந்தர் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளிநாடுகளில் மே 15ம் தேதி வெளியான நிலையில், இந்திய ரசிகர்களுக்காக வரும் ஜூன் 4ம் தேதி துரந்தர் அன்கட் வெர்ஷனாக படக்குழுவினரின் 30 நிமிட எக்ஸ்பீரியன்ஸ் வீடியோவுடன் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்திருக்கிரது. மார்ச் 19ம் தேதி வெளியான துரந்தர் 2 திரைப்படம் இதுவரை பாலிவுட் சினிமா செய்யாத வசூல் சாதனையை இந்தியாவில் படைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

துரந்தர் 1 மற்றும் துரந்தர் 2 எக்ஸ்டண்டட் அன்கட் வெர்ஷனை அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கி தங்களது ரசிகர்களை தக்க வைக்க மிகப்பெரிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் ஒளிபரப்பி கல்லா கட்டி வரும் நிலையில், அடுத்து துரந்தர் 1 மற்றும் 2 ஓடிடி ரிலீஸ் மூலம் ஜாக்பாட் அடிக்க காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X