ஓடிடியில் வெளியானது விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்.. படத்தை பார்த்து பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!

சென்னை: ராட்சசன் படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நல்ல பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுத் தந்திருக்கிறது எஃப்.ஐ.ஆர் திரைப்படம்.

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கெளதம் மேனன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தியேட்டரில் வெளியான நிலையில், நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது.

தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்காத பல ரசிகர்கள், அமேசான் பிரைமில் பார்த்து விட்டு தற்போது விஷ்ணு விஷாலின் நடிப்பை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

வேற லெவல் எஃப்.ஐ.ஆர்

வேற லெவல் எஃப்.ஐ.ஆர்

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் திரையரங்குகளிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸை அள்ளியது. அந்த அளவுக்கு அந்த படத்தின் திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு மற்றும் மிரட்டலான கிளைமேக்ஸ் என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், ராட்சசன் படத்தை பார்த்த அளவுக்கு தியேட்டரில் இந்த படத்தை அதிகப்படியான மக்கள் பார்க்கவில்லை என்ற பேச்சுக்கள் அடிபட்டன.

அமேசான் பிரைமில்

அமேசான் பிரைமில்

ஓடிடி தளங்களிலேயே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் படங்கள் மட்டுமே ரசிகர்களின் பாராட்டுக்களை தொடர்ந்து அள்ளி வருவதாகவே தெரிகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மனு ஆனந்த் மிரட்டல்

மனு ஆனந்த் மிரட்டல்

சமீப காலமாக வெளியாகும் படங்கள் ஹீரோக்களுக்காக மட்டும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி உள்ள விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் இயக்கத்திற்காக பார்க்கலாம் என்கிற பாராட்டுக்களை ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. படத்தை பார்த்த அனைவரும் விஷ்ணு விஷாலின் நடிப்பையும் இயக்குநரின் எழுத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தியேட்டரில் மிஸ் பண்ணிட்டேன்

தியேட்டரில் மிஸ் பண்ணிட்டேன்

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிட்டேன். அந்த சமயத்தில் செமஸ்டர் தேர்வுகள் இருந்ததால் தியேட்டரில் போய் பார்க்க முடியவில்லை. அமேசான் பிரைமில் நேற்று வெளியான இந்த படத்தை பார்த்து மிரண்டு போய் விட்டேன். விஷ்ணு விஷாலின் நடிப்பு அட்டகாசம். ரவிதேஜா இந்த படத்தை தெலுங்கில் வெளியிட்டதற்கு நன்றி என கல்லூரியில் படிக்கும் தெலுங்கு மாணவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வந்ததிலேயே

சமீபத்தில் வந்ததிலேயே

2022ம் ஆண்டு தொடங்கி ஏகப்பட்ட படங்கள் திரையிலும் ஓடிடியிலும் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான படங்களிலேயே சிறந்த படம் என்றால் அது எஃப்.ஐ.ஆர் படத்தை சொல்லலாம். அந்த அளவுக்கு நடிப்பும், திரைக்கதையும் ரசிகர்களை கடைசி வரை அந்த படத்தை ஒரு இடத்திலும் மிஸ் செய்து விடக் கூடாது என உன்னிப்பாக பார்க்க வைத்தது. நேரமும், டேட்டாவும் வீண் ஆகவில்லை என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பெருமைமிகு இந்திய முஸ்லிம்

பெருமைமிகு இந்திய முஸ்லிம்

அப்துல் கலாம், ஷாருக்கான் போன்ற இந்திய பிரபலங்களே இஸ்லாமிய பெயர்களை கொண்டிருப்பதால் வெளிநாட்டு விமான நிலையங்களில் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. மை நேம் இஸ் கான் என ஷாருக்கான் ஒரு படத்தையே கொடுத்தார். இந்நிலையில், பெருமைமிகு இந்திய முஸ்லிம் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்திருப்பது சூப்பரான விஷயம் என்றும், இந்த கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டிய கதை என்றும் எடுத்திருந்த விதமும் அற்புதம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X