இப்படியொரு படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே.. ஓடிடியில் வெளியான டாடா.. ரசிகர்கள் விமர்சனம்!

சென்னை: கடந்த பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான கவினின் டாடா திரைப்படம் மார்ச் 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் தியேட்டரில் வெளியான போதே டாடா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆனால், அந்த படத்தை வெயிட் பண்ணி ஓடிடியில் பார்த்த ரசிகர்கள், தற்போது சமூக வலைதளங்களில், இப்படியொரு படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே என ரசிகர்கள் அந்த படத்தை பாராட்டியும் விமர்சித்தும் வருவதை இங்கே பார்ப்போம்..

கவினுக்கு அடுத்த ஹிட்

கவினுக்கு அடுத்த ஹிட்

சின்னத்திரை நடிகர் கவின் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் பெரிதாக போகவில்லை. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸுக்கு பிறகு கவின் நடித்த லிப்ட் பேய் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த மாதம் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

ஓடிடியில் டாடா

ஓடிடியில் டாடா

கவினின் டாடா படத்தை தியேட்டரிலேயே ஏகப்பட்ட பேர் பார்த்து கொண்டாடிய நிலையில், மார்ச் 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான டாடா படத்தை பார்த்து விட்டு ட்விட்டர் முழுக்க டாடா படத்தின் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. #Dada ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை பாராட்டித் தள்ளி உள்ளனர்.

சிம்பிள் ஸ்டோரி தான்

சிம்பிள் ஸ்டோரி தான்

சிம்பிள் ஸ்டோரி தான், கணிக்கக் கூடிய கிளைமேக்ஸ் தான். ஆனாலும் ரொம்ப அழகா இருக்கு டாடா திரைப்படம் என அந்த படத்தின் காட்சிகளை கோர்வையாக பதிவிட்டு படத்தை இந்த டோலிவுட் ரசிகரே வெகுவாக பாராட்டி உள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாஸின் நடிப்பு மெச்சூரிட்டியாகவும் அந்த கதாபாத்திரங்களாகவே அவர்கள் வாழ்ந்துள்ளனர் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் அண்ட் ஃபைனல் ஷாட்

ஃபர்ஸ்ட் அண்ட் ஃபைனல் ஷாட்

படத்தின் முதல் ஷாட்டில் மணிகண்டன் நெஞ்சில் சிந்து படுத்திருக்கும் காட்சியும் கிளைமேக்ஸில் மணிகண்டன் சிந்துவுக்கு இடையே அவர்களது மகன் ஆதித்யா படுத்திருக்கும் காட்சியையும் வைத்து ஒரு கவிதை மாதிரி படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் கணேஷ் கே. பாபு என விமர்சித்துள்ளனர்.

விஜய்சேதுபதி, பஃபாக்கு அடுத்து

விஜய்சேதுபதி, பஃபாக்கு அடுத்து

நடிகர் கவின் கடைசி வரை மணிகண்டனாகவே வாழ்ந்து இருந்தார். அவரது நடிப்பு, குழந்தையை பார்த்ததும் கண்களில் இருந்து விழும் கண்ணீர் என அனைத்து காட்சிகளும் அருமை. விஜய்சேதுபதி, பகத் ஃபாசிலுக்கு பிறகு ஒரு நேச்சுரலான நடிகராக உருவாகி வருகிறார் கவின் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

செம கெமிஸ்ட்ரி

செம கெமிஸ்ட்ரி

காதலர்கள் என்றால் இப்படித்தான் நெருக்கமாக இருக்கணும் என கவினையும் அபர்ணா தாஸையும் கட்டி உருள விட்டு அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் என்றும் சிம்பிள் கதையாக இருந்தாலும், பார்க்க மனசுக்கு அவ்ளோ நிறைவாக இருக்குன்னு இந்த படத்துக்கு 4/5 ரேட்டிங் கொடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டேன்

தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டேன்

எப்படி இந்த படத்தை தியேட்டரில் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன் என ஏகப்பட்ட ரசிகர்கள் அமேசான் பிரைமில் பார்த்த பிறகு புலம்பி வருகின்றனர். இந்த வீக்கெண்ட் தியேட்டரில் வெளியான படத்தை விட அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள டாடா நிச்சயம் உங்களுக்கு நல்ல படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கும் என ரசிகர்கள் டாடா படத்தை பரிந்துரைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X