OTT: லால் சலாம், மிஷன் 1 ஓடிடி பிசினஸ் இன்னும் நடக்கவே இல்லையா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை: தியேட்டரில் புது படங்கள் வெளியானாலும் குடும்பத்துடன் அதை சென்று பார்க்காமல் எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளன. ஆனால் அந்த படங்களுடன் இணைந்து வெளியான அருண் விஜய்யின் படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படமும் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

OTT fans waiting for Lal Salaam and Mission Chapter 1 digital streaming

ஓடிடியில் வெளியான படங்கள்: தியேட்டருக்கு சென்று பார்ப்பதை விட ரசிகர்கள் குடும்பத்துடன் குறைந்த சந்தா செலவில் வீட்டிலேயே புது படங்களை பார்த்து வருகின்றனர். சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் அயலான் திரைப்படம் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் வெளியானது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சபாநாயகன் படமும் அமேசான் பிரைமில் ஆர் ஜே பாலாஜி நடித்த வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் இதுவரை வெளியாகி இருக்கிறது.

ப்ளூ ஸ்டார் ஓடிடி ரிலீஸ் தேதி: மார்ச் 29-ஆம் தேதி டெண்ட்கொட்டா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகிறது.

அருண் விஜய் படம் என்ன ஆச்சு?: பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக அந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஓடிடியிலாவது ஓடுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் அந்த படத்தின் பிசினஸ் நடக்கவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் ஓடிடி விற்பனை நடந்துள்ள நிலையில் இந்தப் படத்துக்கு என்ன ஆனது என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியிலாவது பார்க்கலாம் எனக்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் வரவில்லை ஏன் என சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லால் சலாம் ஓடிடி ரிலீஸ் எப்போ?: வடக்குப்பட்டி ராமசாமி பிப்ரவரி ஆரம்பத்தில் வெளியான நிலையில், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அதற்கு அடுத்த வாரம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் எந்த ஓடிடியில் எந்த தேதியில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஆனால், இன்னமும் அந்த படம் டிஜிட்டல் வியாபாரம் நடக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. வரும் வாரங்களில் வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர் மற்றும் லால் சலாம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனுமன், மெரி கிறிஸ்துமஸ் எப்போ?: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்துடன் வெளியான ஹனுமன் திரைப்படமும் இன்னமும் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. மேலும், விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், எந்த ஓடிடி நிறுவனமும் அந்த படத்தை வாங்கவில்லையா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X