Guns and Gulaabs Twitter Review: தூள் கிளப்பிய துல்கர் சல்மான்.. ஃபேமிலி மேன் இயக்குநர்களின் சம்பவம்

சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கி மரண மாஸ் காட்டிய இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷி கன்னா, ஷாகித் கபூர் நடித்த ஃபர்ஸி வெப்சீரிசை இயக்கி இருந்தனர்.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப்சீரிஸையும் தாறுமாறாக இயக்கி ரசிகர்களுக்கான இந்த வார Binge Watchஐ படைத்துள்ளனர்.

OTT: Guns and Gulaabs Twitter Review in Tamil is here

துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஆதர்ஷ் கவுரவ் மற்றும் குல்ஷன் தேவய்யா உள்ளிட்டோர் நடிப்பில் ரெட்ரோ லுக்கில் வெளியான கேங்ஸ்டர் படைப்பாக இந்த வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது.

ஃபேமிலி மேன் இயக்குநர்கள்: மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் ஓடிடி வெப்சீரிஸ் மூலம் இந்தியளவில் புகழ்பெற்ற இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே தொடர்ந்து வெப்சிரீஸ்களை இயக்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

OTT: Guns and Gulaabs Twitter Review in Tamil is here

சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டு விஜய்சேதுபதி, ராஷி கன்னா, ஷாகித் கபூர் நடித்த கள்ள நோட்டுக் கதையாக உருவான ஃபர்ஸி வெப்சீரிஸும் ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், அடுத்த சம்பவத்திற்கு ராஜ் மற்றும் டிகே இறங்கி விட்டனர்.

OTT: Guns and Gulaabs Twitter Review in Tamil is here

கன்ஸ் அண்ட் குலாப்ஸ்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப்சீரிஸ் வெளியானது. காமெடி கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள இதில், ராஜ்குமார் ராவ், துல்கர் சல்மான் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி என பான் இந்தியா ரிலீஸாக இந்த ஓடிடி படைப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

துல்கர் சல்மான் மிரட்டல்: கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப்சீரிஸை பார்த்த ரசிகர்கள், துல்கர் சல்மானின் மிரட்டலான நடிப்பை மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர். அவரை தொடர்ந்து ராஜ்குமார் ராவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. ராஜ் மற்றும் டிகே தி ஃபேமிலி மேன் 3 சீரிஸ், சிட்டாடல் வெப்சீரிஸுக்கு முன்னதாக இப்படியொரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் என ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X