OTT Hiddien Gem: ஆஸ்கருக்கு நாமினேஷன் ஆன படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? ஷார்ட் லிஸ்ட்
சென்னை: 98வது ஆஸ்கருக்கான இறுதி நாமினேஷன்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது பெரும்பான்மையானவர்கள் கண்கள் இருப்பது, பேய் படமான சின்னர்ஸ் படத்தின் மீதுதான். காரணம் அந்த படம் மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் நாமினேஷன் ஆகியுள்ளது. இதற்கு முன்னர் அதிக பிரிவுகளின் கீழ் நாமினேஷன் ஆன படம் என்றால் அது டைட்டானிக் படம் தான். அந்த படம் மொத்தம் 14 பிரிவுகளின் கீழ் நாமினேஷன் ஆகி இருந்தது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கருக்கு நாமினேஷன் ஆன சிறந்த படங்கள், அதாவது ஹாலிவுட் சிறந்த படங்களும், வெளிநாட்டு சிறந்த படங்களும் எந்தெந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
சிறந்த படம்
Bugonia
Frankenstein
F1
Hamnet
Marty Supreme
One Battle After Another
The Secret Agent
Sentimental Value
Sinners
Train Dreams.
இந்த படங்கள் தான் ஆஸ்கருக்கு நாமினேட் ஆகியுள்ள ஹாலிவுட் படங்கள். இதில் Bugonia அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது. Frankenstein படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. F1 படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது. Hamnet பிரைம் வீடியோ அதாவது அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது. Marty Supreme படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது. One Battle After Another பிரைம் வீடியோ மற்றும் ஹெச்.பி.ஓ மேக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

The Secret Agent படமானது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. Sentimental Value படமும் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. Sinners படம் இந்தியாவில் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் வெளிநாடுகளில் பிரைம் வீடியோவிலும் ஸ்ட்ரீம் ஆகிறது. Train Dreams படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த படங்கள் அனைத்தும் ஹாலிவுட் படங்கள், இவற்றில் சில படங்களுக்கு தமிழ் டப்பிங் உள்ளது. சில படங்களுக்கு தமிழ் டப்பிங் இல்லை. சின்னர்ஸ் படத்திற்கு பிறகு One Battle After Another படம் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேபோல் வெளிநாட்டு படங்கள் வரிசையில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஹோம்பவுண்ட் படம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். அதே நேரத்தில் அந்த பிரிவில் மற்ற நாட்டு படங்கள் ஐந்து படங்கள் நாமினேஷன் ஆகியுள்ளது. அவை எந்தெந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பது குறித்து காணலாம்.

சிறந்த சர்வதேசப் படம்
It Was Just an Accident
Sentimental Value
Sirât
The Secret Agent
The Voice of Hind Rajab - இந்த படங்கள் தான் வெளிநாட்டு படங்கள் பட்டியலில் நாமினேஷன் ஆகியுள்ள படங்கள். இதில் It Was Just an Accident என்ற ஈரானியப் படம் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. Sentimental Value இந்த படமும் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படம் நார்வே நாட்டைச் சேர்ந்த படம். Sirât இப்படம் இந்தியாவில் எந்த ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீம் ஆகவில்லை. The Secret Agent படமானது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. The Voice of Hind Rajab இப்படம் துனிசியா நாட்டைச் சேர்ந்த படம். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.


Click it and Unblock the Notifications











