OTT Hidden Gem: கடைசி வரை படுத்துட்டே இருக்கும் ஜான் சீனா.. The Wall படத்தை மிஸ் பண்ணாம பாருங்க

சென்னை: ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இருந்தாலும் அதில் வாரா வாரம் வெளியாகும் புது படங்கள், புது வெப் சீரீஸ்கள் பார்ப்பது இயல்பானது தான் என்றாலும், ஓடிடி தளங்களில் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டிய படங்கள், வெப் சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என்பது எக்கச்சக்கமாக உள்ளது. அப்படி ஓடிடி ரசிகர்கள் தேடித் தேடிப் பார்த்து நேரத்தை விரயமாக்காமல் இருப்பதற்காக,OTT Hidden Gem என்று நாங்கள் உங்களுக்காக பல தரமான படங்கள், வெப் சீரீஸ்கள் குறித்த விமர்சனங்களையும் தகவல்களையும் கொடுக்க இருக்கிறோம். அந்த வகையில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா படத்தின் ஆரம்பம் தொடங்கி கிளைமாக்ஸ் வரை படுத்துக் கொண்டிருக்கும் The Wall படத்தைப் பற்றி பார்க்கலாம்.

The Wall படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் டோக் லீமேன் இயக்கத்தில் உருவாகி, ஜான் சீனா மற்றும் ஆரோன் டெய்லர்-ஜான்சன் இணைந்து நடித்துள்ளார்கள். படம் ஈரான் பாலைவனப் பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் ஈரான் ராணுவ வீரருக்கும் இடையில் நடக்கும் உயிர் காக்கும் போராட்டம் தான். ஈரானில் உள்ள ஒரு தளவாடத்தை காக்க, அமெரிக்கா ராணுவம் இரண்டு ராணுவ வீரர்களாக ஜான் சீனா மற்றும் ஆரோன் டெய்லர்-ஜான்சன் ஆகியோரை அனுப்புகிறது.

OTT Hidden Gem The Wall John Cena Aaron Taylor-Johnson Movie Review
Photo Credit:

இதில் ஜான் சீனாவை ஈரான் நாட்டு ராணுவ வீரர் சுட்டு வீழ்த்தி விடுகிறார். காயம் பட்ட ஜான் சீனாவால் எழுந்திருக்க முடியவில்லை. அடுத்து ஆரோனைச் சுட்டுவிடுகிறார். குண்டடி பட்டாலும், அருகில் உள்ள வெறும் கற்களும் மண்ணும் கொண்டு உருவாக்கப்பட்ட இடிந்த பள்ளிக்கூட சுவருக்கு பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறார். இங்கு இருந்து தான் படமே தொடங்குகிறது. ஆரோன் எங்கு இருக்கிறார் என்று எதிரிக்குத் தெரியும், ஆனால் எதிரி எங்கு இருந்து தாக்குகிறார் என்று ஆரோனுக்கு தெரியாது. அதேபோல், ஜான் சீனா படத்தில் 90 சதவீதம் வெயிலில் படுத்துக் கொண்டே இருப்பார்.

Take a Poll

பயம்: இதற்கிடையில் ஆரோன் அமெரிக்க ராணுவத்தின் உதவியை நாட முயற்சி செய்வார், ஆனால் அது பலன் அளிக்காது. அதே நேரத்தில் ஆரோனுடன் வாக்கி - டாக்கியில் பேசும் ஈரான் நாட்டு ராணுவ வீரரின் குரல் மட்டும் தான் மொத்த படத்தையும் நகர்த்திக் கொண்டு போகும். இதில் அரோன் வைத்திருந்த தண்ணீர் தீர்ந்துவிடும், ஜான் சீனாவிடம் இருக்கும் தண்ணீரை எடுக்கலாம் என்று முயற்சிக்கும் போது கால் முறிந்துவிடும். ஆனால் இவற்றை எல்லாம் சிரித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் பேசிக்கொண்டு இருப்பார் ஈரான் நாட்டு ராணுவ வீரர். இப்படியான நிலையில் உயிருடன் தப்பித்துச் சென்றார்களா? இல்லையா என்பது மீதி கதை. எதிரியைக் காட்டிலும் பயம் தான் பெரிய எதிரி என்பதை உணர வைக்கும் படமாக இருக்கும்.

OTT Hidden Gem The Wall John Cena Aaron Taylor-Johnson Movie Review
Photo Credit:

மொத்தத்தில் படம்: மொத்தமாகவே ஒன்றரை நிமிடங்கள் தான் படமே. ஜான் சீனா படுத்துக் கொண்டே இருப்பதால், அவரை பொருட்படுத்தாமல், ஆரோன் மற்றும் ஈரான் நாட்டு ராணுவ வீரர் என மொத்தம் இரண்டே கதாபாத்திரங்கள் தான். இவர்களுக்கு இடையில் நடக்கும் பேச்சு வார்த்தையும், உயிர் வாழ்வதற்கான போராட்டமும் தான் படமே. படத்தின் ஒரு காட்சி, ஒரு ஃபேர்ம் கூட வேஸ்ட் என்று தோன்றாது. ஒரு குரலை மட்டுமே வைத்து திரைக்கதையில் இப்படி ஒரு மாயாஜாலத்தை உருவாக்கி, உயிர் பயத்தை உருவாக்கிட முடியுமா என்ற ஆச்சரியத்தை இந்த படம் கொடுக்கும். ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்துமே கச்சிதமாக பயத்தை உருவாக்கும் வகையில் கையாளப்பட்டுள்ளது. அமேசான் பிரைமில் உள்ள இந்த படம் தமிழ் டப்பிங்கில் இல்லை. ஆனால் அட்டகாசமான படம் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X