OTT Movies: இந்த ஓடிடி நிறுவனத்தின் சப்ஸ்கிரைபரா நீங்க.. பெரிய படங்களை வாங்கி அசத்திட்டாங்க!

சென்னை: தீவிரமான சினிமா ரசிகர்கள்தான் இப்போதெல்லாம் தியேட்டர்களுக்கு அடிக்கடி சென்று படம் பார்க்கின்றார்கள். இல்லையென்றால் தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கின்றார்கள். மற்றபடி, முன்பு போல் பொதுமக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் இல்லை. சினிமா ரசிகர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஓடிடி தளங்களில் படங்கள் பார்க்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இப்படியான நிலையில் இந்த ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள பெரிய பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

இந்தியாவில் உள்ள ஓடிடி தளங்களில் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளம் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஓடிடி நிறுவனங்களில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களை நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது.

netflix vidaamuyarchi thug life retro

குறிப்பாக அஜித்குமார் நடித்து, லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தினை மகிழ் திருமேனி இயக்குகின்றார். படத்தில் அஜித்குமாருடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ரெட்ரோ: அதேபோல், நெட் பிளிக்ஸ் நிறுவனம் சூர்யா நடிப்பில் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமத்தையும் வாங்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெஹ்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் மூலம் சூர்யா கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

க் லைஃப்: அதேபோல் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள அவரது 234வது படமான தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மணி ரத்னம் இயக்கத்தில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் என்றால் அது தக் லைஃப் படம்தான் எனக் கூறப்படுகின்றது. படத்தினை ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

மகிழ்ச்சி: இந்தப் படங்கள் மட்டும் இல்லாமல், துல்கர் சல்மானின் காந்தா, பிரதீப் ரங்கநாதனின் டிராகன், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன், வைபவ் கமிட் ஆகியுள்ள பெருசு ஆகிய படங்களின் ஓடிடி உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இதனால் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரைபர்கள் செம குஷியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X